பிரம்மாண்ட படங்களை இயக்கி வரும் ஷங்கர் ஒருபக்கம் சினிமா துறையில் கலக்கி கொண்டு இருக்கும் நிலையில் மற்றோரு பக்கம் அவருடைய இளைய மகள் அதிதி ஷங்கர் படங்களில் ஹீரோயினாகி நடித்து கலக்கி கொண்டு இருக்கிறார். ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா சினிமா துறையில் ஆர்வம் காட்டவில்லை படிப்பில் அதிகம் கவனம் இருந்த காரணத்தால் அப்படியே சினிமாவுக்கு வராமல் திருமணம் செய்துவிட்டு திருமண வாழ்க்கையிலும் இணையப்போகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் ஐஸ்வர்யாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர் திருமணம் செய்துகொண்டு வாழ்வில் செட்டில் ஆகப்போகும் நிலையில், அவருடைய தங்கை அதிதி ஷங்கர் சினிமா மீது அதிகம் ஆர்வம் கொண்ட காரணத்தால் தான் இனிமேல் படங்களில் கவனம் செலுத்த போவதாகவும் முடிவு எடுத்து இருக்கிறாராம்.
திருணம் குறித்த பேச்சு எடுத்தாலே தனக்கு இப்போது திருமணம் வேண்டாம் என்று அதிதி ஷங்கர் அடம் பிடிக்கிறாராம். இந்த தகவலை பிரபல நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” நடிகை அதிதி ஷங்கர் படிப்பில் ஆர்வம் காட்டி மருத்துவர் பட்டம் வாங்கிவிட்டார்.
இப்போது சினிமா துறையில் இப்போது அதிதி ஷங்கர் 3 படங்கள் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். அவர் நடிக்க கமிட் ஆகி இருக்கும் படங்களின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதிதி ஷங்கர் இப்போது திருமணம் செய்துகொள்ள எண்ணம் இல்லை என்று கூறிவிட்டார். ஆனால், அவருடைய அக்கா திருமணம் செய்துகொள்ளவுள்ளார். அதிதி சினிமா மட்டும் தான் கவனம் செலுத்தி வருகிறார்” என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
சென்னை : எழும்பூர் அரசு அருங்காட்சியகக் கலையரங்கில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி பன்னாட்டுக் கருத்தரங்கு…
மும்பை : ஷங்கர் இயக்கத்தில் அரசியல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வரும் ஜனவரி 10-ஆம்…
சென்னை : தமிழ்நாட்டில் வரும் 10, 11 ஆகிய நாட்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு…
திருப்போரூர் :செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் உள்ள முருகன் கோவிலுக்கு கடந்த அக்டோபர் மாதம் சென்னையை சேர்ந்த தினேஷ் என்பவர்…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக 24வது மாநில மாநாடு கடந்த ஜனவரி 3-ஆம் தேதி விழுப்புரம் – சென்னை தேசிய…
சிட்னி : பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை ஆஸ்ரேலியா கைப்பற்றியுள்ளது இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…