Samantha : நடிகை சமந்தா தனது சம்பளத்தை 12 கோடிக்கு உயர்த்தியதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகையான சமந்தா தற்போது மயோசிடிஸ் நோயில் இருந்து மெல்ல மெல்ல குணமடைந்தது பழையபடி படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். அந்த வகையில் அவர் தற்போது ஹிந்தியில் வெப் தொடர் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த வெப் தொடரை தொடர்ந்து படங்களில் நடிக்கவும் கதை கேட்டு வருவதாக கூறப்படுகிறது. இருந்தாலும் ஆரம்ப காலத்தை போல அவருக்கு பட வாய்ப்புகள் குவியவில்லை என்றே சொல்லலாம்.
இப்படியான சூழலில் நடிகை சமந்தா தனது சம்பளத்தை 12 கோடி உயர்த்தி உள்ளதாக நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன் ” நடிகை சமந்தா மயோசிடிஸ் நோயில் பாதிக்கப்பட்டு ஒரு ஆண்டு காலமாக படங்களில் நடிக்காமல் ஓய்வெடுத்து வந்தார். இப்போது உடல் நலம் நன்றாக இருப்பதால் மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார்.
இந்தி, தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் சமந்தாவிற்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. பல தயாரிப்பாளர்களும் சமந்தாவை தேடிக் கொண்டு செல்கின்றனர். இந்த சூழ்நிலையில் விளம்பர படங்களில் சமந்தா நடிக்க அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார். ஒரே ஒரு விளம்பர படத்தில் நடிப்பதற்கு சம்பளமாக சமந்தா 2 கோடி கேட்கிறார்.
அதேபோல ஒரு படத்தில் நடிக்க கமிட்டானார் என்றால் அந்தப் படத்தில் நடிக்க 8 கோடியும் அதுவே வெப்ப தொடரில் நடிக்க வேண்டும் என்றால் 12 கோடியும் சம்பளம் கேட்கிறார்” எனவும் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு இப்போது மார்க்கெட் பெரிதாக இல்லை அப்புறம் எப்படி இவ்வளவு சம்பளம் வாங்குவார் என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …
டெல்லி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…