பட தோல்வியால் அந்த விஷயத்தை செய்த கங்கனா ரனாவத்! உண்மையை உளறிய பயில்வான் ரங்கநாதன்!

Bayilvan Ranganathan
Kangana Ranaut ஹிந்தி சினிமாவில் பல படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை கங்கனா ரனாவத். எந்த மாதிரி கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அருமையாக நடித்து கொடுக்க கூடிய இவருக்கு பட வாய்ப்புகள் வந்தாலும் இவர் நடிக்கும் படங்கள் எல்லாம் தொடர்ச்சியாக தோல்வி அடைந்து வருகிறது. குறிப்பாக தமிழில் இவர் நடிப்பில் வெளியான சந்திரமுகி 2 திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு விமர்சனத்தை பெறவில்லை வசூலிலும் தோல்வியை சந்தித்தது.

READ MORE – முன்னணி நடிகர்கள் சம்பளம் குறைப்பு? ஆலோசனை கூட்டத்தில் முடிவு?

அதைப்போல, கங்கனா ரனாவத் தகாட், டிக்கு வெட்ஸ் ஷெரு, தேஜஸ் ஆகிய படங்களும் தோல்வியை சந்தித்துள்ளது. தொடர்ச்சியாக படங்கள் தோல்வி அடைந்துள்ள காரணத்தால் நடிகை கங்கனா ரனாவத் அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அது என்னவென்றால், கங்கனா ரனாவத் மும்பையில் தனக்கு சொந்தமான நிலங்களை விற்றுவிட்டாராம்.

READ MORE – இளையராஜாவாக நடிக்க தனுஷ் கேட்ட சம்பளம்? அதிர்ந்து போன கோலிவுட் வட்டாரம்!!

இந்த தகவலை நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன் ” நடிகைகள் பணம் சம்பாதித்துக்கொண்டு இருக்கும் சமயத்தில் நிலங்களை வாங்கிப்போடுவது வழக்கமான ஒன்று. அப்படி தான் கங்கனா ரனாவத் சொந்த இடத்தை மிருனாள் தாகூர் வாங்கி இருக்கிறார்.

read more- அந்த மாதிரி காட்சியில் தயக்கம்…’எனக்கில்ல ஹீரோக்கு’! ரியா சுமன் ஓபன் டாக்!!

கங்கனா ரனாவத் நடித்த படங்கள் எல்லாம் தொடர்ச்சியாக தோல்வி அடைந்த காரணத்தால் அவர் தற்போது தனது சொன்னதமான நிலத்தை விற்று இருக்கிறார். தொடர்ச்சியாக 10 படங்கள் கங்கனா ரனாவத்க்கு தோல்வியை கொடுத்த காரணத்தால் அவருக்கு மார்க்கெட் சரிந்துள்ளது. இதன் காரணமாக தான் பணத்திற்காக நிலத்தை கங்கனா ரனாவத் விற்றுள்ளார்” என நடிகர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
tn rains
RepublicDayParade - Chennai
Nei vilakku (1)
vishal - vijayantony
Congress Leader Selvaperunthagai say about TVK Vijay
Heart Donation