போனிகபூர் கிட்ட அஜித் சொன்ன ரகசியம்? ரொம்ப சீக்ரெட்டா இருக்கே!
Boney Kapoor : போனிகபூரிடம் நடிகர் அஜித்குமார் ரகசியம் ஒன்றை கூறியுள்ளதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித்குமார் தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்களில் போனிகபூர் இருக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான். குறிப்பாக சொல்லவேண்டும் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களை அஜித்தை வைத்து போனிகபூர் தான் தயாரித்து இருந்தார். இந்த படங்களுமே நல்ல வெற்றியை பெற்றது .
கடைசியாக இவர்களுடைய கூட்டணியில் வெளியான துணிவு படம் பெரிய அளவில் பட்ஜெட்டை தாண்டி வசூல் செய்து இருந்தாலும் லாபம் பெரிய அளவில் கொடுக்கவில்லை என்று கூட சொல்லலாம். துணிவு படத்தை தொடர்ந்து அடுத்ததாக போனிகபூர் தமிழில் எந்த படமும் தயாரிக்கவும் இல்லை.
இந்நிலையில், போனிகபூரிடம் அஜித்குமார் சொன்ன ரகசியம் ஒன்று பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. போனிகபூரிடம் அஜித்குமார் துணிவு பட சமயத்தில் நான் இன்னும் உங்களுக்கு கண்டிப்பாக படத்தை தயாரிக்க வாய்ப்பு தருவேன். ஆனால், என்னை வைத்து இன்னும் எத்தனை படங்கள் வேண்டுமானாலும் தயாரிங்கள்.
ஆனால், படத்தின் ப்ரோமோஷனுக்காக மட்டும் என்னை ஒரு போதும் கூப்பிடவே கூப்பிடாதீங்க. எனக்கு படத்தின் ப்ரோமோஷன் வருவதில் அந்த அளவிற்கு பெரிய விருப்பம் இல்லை எனவே என்னை தயவுசெய்து ப்ரோமோஷனுக்காக மட்டும் அழைக்காதீங்க என்று போனிகபூரிடம் அஜித்குமார் கூறினாராம். இந்த தகவலை பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.