Selvaraghavan : செல்வராகவன் தன்னை கெட்டவார்த்தை போட்டு திட்டியதாக பாவா லட்சுமணன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் செல்வராகவன் படப்பிடிப்பு தளங்களில் மிகவும் கோபமாக நடந்து கொள்வார் என சில பிரபலங்கள் பேசி நாம் கேள்வி பட்டு இருக்கிறோம். சரியாக நடிக்க வில்லை டேக் போய்க்கொண்டே இருக்கிறது என்றால் கூட உடனடியாகவே செல்வராகவன் டென்ஷன் ஆகிவிடுவார்.
அப்படி தான் ஒருமுறை காதல் கொண்டேன் படப்பிடிப்பு தளத்தில் கூட தனுஷ் ஒரு காட்சியில் சரியாக நடிக்கவில்லை என்பதால் டேக் போய்க்கொண்டே இருந்த காரணத்தால் கோபத்தில் தனுஷை கன்னத்தில் அறைந்துவிட்டார். இதனை தனுஷே மேடை ஒன்றில் பேசி இருந்தார். இந்நிலையில், தனுஷை தொடர்ந்து பிரபல நடிகரான பாவா லட்சுமணன் பேட்டி ஒன்றில் தான் செல்வராகவன் என்னை கெட்டவார்த்தை போட்டு திட்டி அனுப்பிவிட்டதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய பாவா லட்சுமணன் ” நடிகர் தனுஷுடன் நான் புதுப்பேட்டை படத்திலே நடித்து கொண்டு இருந்தேன். ஆனால், எனக்கு சரியாக நடிப்பு வரவில்லை என்று கூறி இயக்குனர் செல்வராகவன் பயங்கரமாக திட்டி கெட்டவார்த்தை போட்டு உனக்கு நடிக்கவே தெரியவில்லை நீ கிளம்பு என்று அனுப்பிவிட்டார். அந்த சமயம் எனக்கு இது ரொம்பவே வேதனையாக இருந்தது.
நான் மட்டும் இல்லை அங்கு படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் பாதி உதவி இயக்குனர்கள் செல்வராகவன் கிட்ட திட்டு வாங்குவார்கள். படப்பிடிப்பு தளத்திற்கு அவர் வாரார் என்ற தகவல் தெரிந்தாலே போதும் அனைவரும் வேகமாக சென்று எங்கையாவது ஓடி விடுவார்கள். அந்த அளவுக்கு படப்பிடிப்பு தளத்தில் செல்வராகவன் கோபப்படுவார்” எனவும் நடிகர் பாவா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…
சென்னை : இன்று (ஜனவரி 18) சனிக்கிழமை தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில்…
சென்னை : தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட சேலையூர், மணிமங்கலம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், உள்ளிட்ட 8 இடங்களில் ஒரே நாளில் செயின் பறிப்பு…
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …