[file image]
‘லியோ’ திரைப்படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. லியோ படத்தை சட்ட விரோதமாக 1,246 இணையதளங்களில் வெளியிட தடை விதிக்கக் கோரி பட தயாரிப்பு நிறுவனம் மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அப்துல் குத்தூஸ், லியோ படத்தை விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
லியோ படம் LCU தான்? விமர்சனத்தை கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் திரைப்படங்களை தொடர்ந்து 5-ஆவது படமான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் நாளை உலக முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நடிகர் விஜயின் லியோ படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். லியோ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், ப்ரோமஷன் பணிகள் ஒரு பக்கம் நடக்க, மறுபக்கம் படத்தின் டிக்கெட் புக்கிங் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. நாளை 19ம் தேதி முதல் 25ம் தேதி வரை லியோ திரைப்படத்திற்கு காலை 7 மணி காட்சிகளுக்கு அனுமதி கிடையாது.
Leo FDFS: காலை 7 மணி காட்சிக்கும் கிடையாது..விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
இதனால் ஏற்கனவே, தமிழக அரசு அரசாணை வெளியிட்ட படி, நாளை முதல் 25ம் தேதி வரை 9 மணி காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 5 காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, பல்வேறு பிரச்சனைகளை தாண்டி, பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் லியோ திரைப்படம் நாளை தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம், ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், லியோ படத்தை சட்ட விரோதமாக 1,246 இணையதளங்களில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
துபாய் : இந்தியா இன்னும் ஆக்ரோஷமாக பேட்டிங் செய்திருந்தால் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை சீக்கிரம் முடித்திருக்க முடியும் என்று ஸ்ரேயாஸ்…
சென்னை : அம்மா என அதிமுகவினரால் அன்பாக அழைக்கப்படும் மறைந்த முன்னாள் முதலைமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் இன்று. மறைந்து விட்டாலும்,…
சென்னை : அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. ஜெயலலிதா மறைந்த பிறகு எடப்பாடி…
நாகர்கர்னூல் : தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் சுரங்கப்பாதை தோண்டும் வேலை நடைபெற்று வந்தது. கடந்த சனிக்கிழமை காலையில், டோமலபெண்டா…
சென்னை : சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொன்டு இருப்பதை…
சென்னை : தங்கம் விலை கடந்த 53 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.7,480 உயர்ந்துள்ளது. கடந்த டிச.31ஆம் தேதி 22…