பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களுக்கு மத்தியில் பிரபலமான பாலாஜி முருகதாஸ் தற்போது படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். அந்த வகையில் இவர் தற்போது வா வரலாம் வா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தினை எஸ்.பி.ஆர் மற்றும் எல்.ஜி.ஆர் ஆகியோர் சேர்ந்து இயக்கியுள்ளார்கள்.
படத்தில் பாலாஜி முருகதாஸுடன் மஹானா சஞ்சீவி, ரெடினா கிங்ஸ்லி, காயத்ரி ரம்யா, மைம் கோபி, சிங்கம் புலி, சரவணன் சுப்பையா, தீபா, வையாபுரி, அஷ்மிதா சிங் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து இருக்கிறார்கள். படத்திற்க்கு இசையமைப்பாளர் ஸ்ரீ காந்த தேவா இசையமைத்து உள்ளார். இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் பாலாஜி முருகதாஸ் கலந்து கொண்டார். அந்த பேட்டியில் தன்னுடைய வாழ்வில் நடந்த கசப்பான அனுபவங்களை பற்றி பகிர்ந்துள்ளார்.
மாறி மாறி முத்தம்! பிரபல நடிகையுடன் நெருக்கமாக இருக்கும் பூர்ணிமா ரவி?
இது குறித்து பேசிய அவர் ” நான் யாருக்குமே சொல்லாத ஒரு விஷயம் ஒன்றை இப்போது சொல்ல போகிறேன். என்னுடைய நண்பர் ஒருவர் பிரசாந்த் என்று ஒருவர் அவருடைய பெயரைப் பற்றி இதுக்கு மேலயும் அவரைப் பற்றிய விவரங்களை சொல்ல நான் விரும்பவில்லை. ஒருநாள் என்னிடம் நீ நடிப்பு திறமைக்காக வகுப்புகளுக்கு சென்று இருக்கிறாய்.
எனக்கு ஒரு இயக்குனரை தெரியும் அவர் ஒரு தயாரிப்பாளர் கிட்ட கதை சொல்லி இருக்கிறார். அந்த கதையில் நீ சரியாக இருப்பாய் அவர் சின்னதாக இப்போது குறும்படம் எடுத்து கொண்டிருக்கிறார். அடுத்த படத்தில் நீ நடிக்கலாம் என கூறினார். அதற்கு பணமாக இயக்குனர் பணம் கேட்டார் அந்த பணத்தை அவர் ஒரு வருடத்தில் திருப்பி தந்துவிடுவார் என்று என்னிடம் 80,ஆயிரம் கேட்டான். நானும் நண்பன் சொல்கிறார் என்று கல்லூரி பீஸ் கட்ட வைத்திருந்த பணத்தை எடுத்து கொடுத்தேன்.
அந்த பணத்தை எடுத்துக்கொண்டு என்னை ஏமாற்றிவிட்டு சென்றுவிட்டான். கல்லூரியில் பீஸ் கட்ட முடியாமல் நான் கல்லூரியே விட்டே நின்றேன். ஏனென்றால், அந்த பணத்தை என்னால் திரும்ப திரட்டவே முடியவில்லை. எனவே அதனால் என்னுடைய கல்லூரி படிப்பு அப்படியே நின்றுவிட்டது” என கண்கலங்கி பேசியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கவலை படாதீங்க என ஆறுதலை தெரிவித்து வருகிறார்கள்.
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…