Balachander : பாரதி ராஜா படத்தை பார்த்துவிட்டு காலில் விழுவேன் என கூறிய பாலச்சந்தர்! எந்த படத்தை பார்த்து தெரியுமா?

Balachander AND Bharathiraja

16 வயதினிலே எனும் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் பாரதி ராஜா. இந்த திரைப்படம் கடந்த 1977-ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தின் மூலம் அறிமுகமான பாரதி ராஜா தமிழ் சினிமாவில் ஒரு கலக்கு கலக்கி வருகிறார் என்றே கூறலாம். மண் வாசம் மாறாத கதையம்சம் கொண்ட கிராமத்து கமர்ஷியல் படங்களை மக்களுக்கு பிடித்தது போல இயக்கி கொடுத்து இதுவரை பல ஹிட் படங்களை இயக்கி கொடுத்துள்ளார்.

இவர் முன்னணி இயக்குனராக வளம் வந்துகொண்டிருந்த சமயத்திற்கு முன்பே இயக்குனர் கே.பாலசந்தர் தொடர்ச்சியாக பல திரைப்படங்களை கொடுத்துக்கொண்டு இருந்தார். இவர் பாரதி ராஜாவுக்கு முன்பே சினிமாவிற்கு அறிமுகமாகிவிட்டார். கிட்டதட்ட பாரதி ராஜா சினிமாவில் இயக்குனராக அறிமுகமான சமயத்தில் பாலச்சந்தர் ஹிந்திக்கு சென்றே இயக்கம் செய்துகொண்டு இருந்தார்.

இருப்பினும் பாலா சந்தர் ஒரு பக்கம் ஹிட் கொடுத்து வர பாரதி ராஜாவும் கமர்ஷியல் படங்களை இயக்கி ஹிட் கொடுத்துக்கொண்டு வந்தார். அந்த சமயமே பாலச்சந்தர் இயக்குனர் பாரதி ராஜாவின் படங்களை பார்த்துவிட்டு பாராட்டியும் விடுவாராம். குறிப்பாக ஒரு படத்தை பார்த்துவிட்டு மிரண்டு போய் பாரதி ராஜா காலில் கூட விழுவேன் என பாலசந்தர் மேடையிலே தெரிவித்தாராம்.

இந்த தகவலை சினிமா ஆய்வாளரும், மருத்துவருமான காந்தராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து அந்த பேட்டியில் அவர் பேசியதாவது ” பாலசந்தருக்கு பாரதி ராஜா என்றாலே மிகவும் பிடிக்கும். பாரதி ராஜா இயக்கிய நிழல்கள் படமும், பாலச்சந்தர் இயக்கிய நிறம் மாறாத பூக்கள் திரைப்படமும் கிட்டத்தட்ட ஒரே கதை தான்.

இரண்டு திரைப்படமும் நன்றாக வெற்றியை பெற்றது. அதன் பிறகு பாரதி ராஜா எடுத்த புதிய வளர்ப்புகள் படத்தை பார்த்துவிட்டு பாலசந்தர் தேவையில்லாத கருத்து ஒன்றை கூறினார். படத்தை பார்த்துவிட்டு பாரதி ராஜா காலில் நான் விழுகிறேன். அப்படி பட்ட ஒரு அருமையான படத்தை கொடுத்திருக்கிறார் என கூறினார்” என காந்தராஜ் தெரிவித்துள்ளார்.

அந்த சமயம் பாரதி ராஜாவை விட முன்னணி இயக்குனராக இருந்த பாலசந்தர்  மேடையிலே அனைவருடைய முன்பு காலில் விழுகிறேன் என கூறிய தகவலை பார்த்த ரசிகர்கள் பாலசந்தரை பாராட்டி வருகிறார்கள். பாலசந்தர்   கடைசியாக 2006-ஆம் ஆண்டு வெளியான பொய் படத்தை இயக்கி இருந்தார். அந்த படத்தை தொடர்ந்து அவர் எந்த படத்தையும் இயக்கவில்லை பிறகு கடந்த 2014-ஆம் ஆண்டு காலமானார். அவர் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் கூட தாமரை நெஞ்சம், காவிய தலைவி, கண்ணா நலமா, மன்மத லீலை,மூன்று முடிச்சு, நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட படங்கள் காலத்தால் அழியாதவையாக இருக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்