படப்பிடிப்பில் துன்புறுத்திய இயக்குனர் பாலா…22 வயது நடிகை ஓபன் டாக்!

Dir Bala - Mamitha Baiju

Mamitha Baiju: வணங்கான் படத்தில் நடித்த போது இயக்குநர் பாலா தன்னை அடித்ததாக 22 வயாதான மலையாள நடிகை மமிதா பைஜூ தெரிவித்துள்ளார். இயக்குனர் பாலாவின் படங்கள் வெற்றி பெற்றாலும் ஓராண்டுக்கு ஒரு படங்கள் கூட வெளியாவது அரிது தான். அவர் தான் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் மிகவும் கண்டிப்புடன் நடந்து கொள்வார் என பேச்சுக்கள் அடிக்கடி அடிபடுவதுண்டு.

READ MORE – 10 வருட டேட்டிங்…நடிகை டாப்ஸிக்கு விரைவில் திருமணம்! எந்த முறைப்படி தெரியுமா?

முன்னதாக, பரதேசி திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது, தன்னை தாக்கியதாக அதில் நடித்த நடிகர்கள் அண்மையில் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. அது போல், தன்னுடன் பணிபுரியும் உதவி இயக்குனரையும் அடித்ததாக செய்திகள் வெளியானது. அந்த வகையில், இயக்குனர் பாலா தற்போது இயக்கி வரும் வணங்கான் படப்பிடிப்பில் இது போன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

READ MORE – தயவு செஞ்சு மன்னிச்சிடுங்க! வீடியோ வெளியீட்டு விளக்கம் கொடுத்த சிவகுமார்!

வணங்கான் படத்தில் முதலில் நடிகர் சூர்யா நடித்து வந்தார். பின்னர், சில காரணங்களால் படத்தில் நடிக்க மாட்டேன் என்று சூர்யா வெளியேறினார். இப்பொது அவருக்கு பதிலாக அருண் விஜய் நடித்து உள்ளார். சமீபத்தில், படத்திற்கான டீசரும் வெளியனாது. இந்த நிலையில், இந்த படத்தில் பணிபுரிந்த இளம் மலையாள நடிகை மமிதா பைஜூ, வணங்கான் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து கொண்டு இருக்கும்பொழுது, தன்னை தாக்கியதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

READ MORE – சும்மா கிளப்பி விடாதீங்க! ‘கில்லி ரீ-ரீலீஸ்’ குறித்து குண்டை தூக்கிப்போட்ட தயாரிப்பாளர்.!

இது குறித்து அவர் தனியார் ஊடக ஒன்றிக்கு பேட்டியளிக்கையில், “வணங்கான் படத்தில் ஒரு காட்சியில் நான் டிரம்ஸ் மாதிரியான வாத்தியத்தை அடித்தபடி பாடிக் கொண்டே ஆடவேண்டும். அதற்காக எனக்கு பயிற்சி எடுத்துக் கொள்ள போதுமான நேரம் கிடைக்கவில்லை, அதனால் 3 டேக்குக்கு பிறகும் எனக்கு சரியாக வரவில்லை. இதனை எனக்கு பின்னால் இருந்து பார்த்துக் கொண்டிருந்த இருந்த இயக்குனர் பாலா எனது தோள்பட்டையில் அடித்தார்” என்று நடிகை மமிதா பைஜூ கூறிஉள்ளார்.

மமிதா சமீபத்தில், மலையாளத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்று வரும் ‘பிரேமலு’ படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

premalu
premalu [File Image]

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்