சர்ச்சைகளுக்கு மத்தியில் 3-வது திருமணம் செய்த பாலா! பொண்ணு யாரு தெரியுமா?
இந்த முறை என்னுடைய திருமண வாழ்க்கை நீண்ட காலத்திற்கும் நிலைத்து இருக்கும் என மூன்றாவது திருமணம் செய்துகொண்ட நடிகர் பாலா தெரிவித்துள்ளார்.

கேரளா : நடிகரும், இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பியுமான பாலா சர்ச்சைகளுக்கு மத்தியில் மூன்றாவது முறையாகத் திருமணம் செய்துகொண்டுள்ளார். சென்னையைச் சேர்ந்த அவருடைய உறவினரான கோகிலாவை என்பவரைக் காதலித்து வந்த நிலையில், உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார்.
மூன்றாவது திருமணம்
இதற்கு முன்பு, பாலா பாடகி அம்ருதா சுரேஷை காதலித்துக் கடந்த 2010-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகக் கடந்த 2019-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுக்கொண்டார் . அதன்பிறகு, எலிசபெத் உதயன் என்பவரைக் கடந்த 2021-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இந்த ஆண்டு அவரிடமும் விவாகரத்து பெற்றுக்கொண்டார்.
என்ன சர்ச்சை?
இப்போது திருமண வாழ்க்கையைச் சந்தோசமாகப் பாலா தொடங்கி இருந்தாலும் சமீபத்தில் ஒரு சர்ச்சையில் சிக்கினார் என்றே கூறலாம். அது என்னவென்றால், பாலாவின் முதல் மனைவி அம்ருதா சுரேஸ் கடந்த மாதம் காவல்துறையில் பாலா மீது புகார் அளித்து இருந்தார். தன்னையும், தன்னுடைய மகளிடமும் பிரச்சினை செய்வதாகக் கூறி குற்றம்சாட்டி புகார் அளித்து இருந்தார்.
அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் பாலாவை ஆஜராகுமாறு அழைத்து இருந்தனர். ஆனால், அதே சமயம் அவர் ஆஜராகவில்லை என்ற காரணத்தால், எடப்பள்ளியில் உள்ள பாலாவின் வீட்டிற்கு வந்த போலீசார் அவரை கைது செய்தனர். அதன் ஜாமினில் வெளியே வந்த பாலா ” தன்னை சிலர் ஒரு வலையில் சிக்க வைக்க முயற்சிக்கிறார்கள் என்றும் தன்னுடைய 250 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அபகரிக்கும் வேலைகளிலும் ஈடுபட்டுள்ளார்கள்” என முதல் மனைவி மீது குற்றம் சாட்டி பேசி வீடியோ வெளியீட்டு இருந்தார்.
இந்த விஷயம் சர்ச்சையாக வெடித்த நிலையில், அப்போதே தான் திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையைத் தொடங்கப்போவதாகவும் முன்பே பாலா அறிவித்து இருந்தார். எனவே, இந்த சர்ச்சை இன்னும் முடியாத நிலையில், திடீரென இன்று கோகிலாவைத் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
திருமணம் குறித்து பாலா
திருமணம் முடிந்தது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த பாலா பேசியதாவது ” கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின் தனக்கு ஆதரவு தேவைப்படுவதாக உணர்ந்த காரணத்தால் தான் நான் திருமணம் செய்துகொள்ளும் முடிவெடுத்தேன். இந்த முறை என்னுடைய திருமண வாழ்க்கை நீண்ட காலத்திற்கும் நிலைத்து இருக்கும். ஏனென்றால், கோகிலா என்னுடைய உறவினர் என்பதால் எனக்கு இதில் நம்பிக்கை இருக்கிறது.
என்னைத் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்பது கோகிலா சிறிய வயதிலிருந்தே ஆசைப்பட்டு இருக்கிறார். இப்போது எங்களுடைய திருமணம் நடந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது” எனவும் பாலா தெரிவித்தார். இதனையடுத்து, ரசிகர்கள் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.