Categories: சினிமா

பாலா இயக்கத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் படம் குற்றபரம்பரையா?

Published by
Venu

பாலா தற்போது ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் நாச்சியார் படம் இயக்கி வருகிறார். இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது. அதில் ஜோதிகா கெட்ட வார்த்தை பேசி நடித்திருப்பதாக எதிர்ப்பு கிளம்பியது. இப்படத்தின் பணியை வேகப்படுத்தியிருக்கும் பாலா குற்றப்பரம்பரை படத்தையும் இயக்க உள்ளாராம்.
வேல ராமமூர்த்தி எழுதிய குற்றப்பரம்பரை கதையை பாலா இயக்கப்போவதாக ஏற்கனவே அறிவித்த நிலையில் திடீரென்று பாரதிராஜா அதே கதையை மையமாக வைத்து படம் இயக்கி நடிப்பதாக தடபுடலாக படப்பிடிப்பு தொடங்கினார்.

ஆனால் சில மாதங்களில் அதன் படப்பிடிப்பு தொடராமல் நிற்கிறது. பாரதிராஜா இப்படத்தை அறிவித்தபோதிலும் குற்றப்பரம்பரை படத்தை இயக்கியே தீருவேன் என்று பாலா தெரிவித்திருந்தார்.

நாச்சியார் படத்துக்கு பிறகு அர்ஜுன் ரெட்டி தெலுங்கில் நடித்த படத்தை தமிழில் வர்மா என்ற பெயரில் இயக்க உள்ளார் பாலா. இதில் விக்ரம் மகன் துருவ் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். அதன்பிறகு குற்றப்பரம்பரையை படமாக்கஇருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே அரவிந்த்சாமி, விஷால், ஆர்யா, அதர்வா, ராணா, அனுஷ்கா போன்ற ஸ்டார்களை இணைத்து பாலா படம் இயக்க உள்ளதாக தகவல் வெளிவந்தது. அதில் தற்போது விக்ரம் வேதா படத்தில் நடித்த ஸ்ரத்தா ஸ்ரீநாத்தும் நடிக்க உள்ளாராம். அநேகமாக இப்படம் குற்றப்பரம்பரையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
source: dinasuvadu.com

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

5 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

6 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

7 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

7 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

7 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

8 hours ago