பாட்டை கேட்க முடியல..எதுக்கு இது? இளையராஜாவை விமர்சித்த பயில்வான்!
இளையராஜா : சாமானியன் படத்தில் இளையராஜா பாடிய பாடல் கேட்க முடியாத வகையில் இருப்பதாக பயில்வான் ரங்கநாதன் விமர்சித்துள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜா ஆரம்ப காலத்தை போல இப்போது பல படங்களுக்கு இசையமைக்கவில்லை என்றாலும் கூட ஒரு சில படங்களுக்கு இசையமைத்து கொண்டு வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் ராமராஜன் ஹீரோவாக நடித்த சாமானியன், மற்றும் விடுதலை ஆகிய படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார்.
இதில், சாமானியன் படம் கடந்த மே 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் ஒரு அளவு மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் ஓடி கொண்டு இருக்கும் நிலையில், படத்தில் இடம்பெற்ற பாடல்களை நடிகரும், சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் விமர்சித்து பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன் ” சாமானியன் படத்தில் இளையராஜா இசையமைத்துள்ள பாடல்கள் பெரிய அளவில் ஈர்க்கும் படி இல்லை. படத்தில் அவரே ஒரு பாடலையும் பாடி இருக்கிறார். அது எதற்காக பாடினார் என்று தெரியவில்லை. எதுக்காக பாடினார் என்று அவருக்கு தான் தெரியும் என்று நான் நினைக்கிறன்.
அந்த பாடல் கேட்கும் அளவிற்கு இல்லை. மிகப்பெரிய இசைஞானி அவருடைய பாடலை விமர்சிக்கும் தகுதி கூட எனக்கு இல்லை. ஆனாலும், என்னுடைய பொறுமையை இளையராஜா சோதிக்கிறாரு . பழைய பாடல்களை இந்த சாமானியன் படத்தில் போட்டுள்ளார். செண்பகமே..செண்பகமே பாடலை யாருமே மறக்க முடியாது அந்த பாடலையும் படத்தில் இளையராஜா போட்டு இருக்கிறார்” என்றும் பயில்வான் ரங்கநாதன் விமர்சித்துள்ளார்.