சுருளி ராஜன் மரணித்தது எப்படி? ரகசியத்தை உடைத்த பயில்வான் ரங்கநாதன்!

Suruli Rajan - pailwaan ranganathan

1938-ம் ஆண்டு தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளத்தில் பிறந்த சுருளி ராஜன், சிறு வயதிலேயே தனது பெற்றோரை இழந்ததால், தனது அண்ணன் வளர்ப்பால் வளர்ந்து வந்த அவர், சினிமா நாட்டம் காரணமாக சென்னைக்கு வந்து மேடை நாடகங்களில் நடிக்க தொடங்கிய அவருக்கு முதலில் 1965-ல் இரவும் பகலும் படத்தில் ஒரு சிறிய தோற்றத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

பின்னர், டி.என்.பாலுவுடனான அவரது நட்பு, டி.ர்.ராமண்ணாவின் நான் மற்றும் மூன்றெழுத்து போன்ற பிளாக்பஸ்டர் படங்களில் அவருக்கு மறக்க முடியாத கதாபாத்திரங்களை தேடி தந்தது. ஆனால் குறைவாக படங்களில் நடித்திருந்தாலும் தனது நகைச்சுவை மூலம் பலரையும் கவர்ந்தவர் சுருளி ராஜன்.

அந்த வகையில், எம்ஜிஆர் காலத்தில் மிகவும் புகழ்பெற்ற அவர், நடிகர் சிவாஜி கணேசன் உடன் பல படங்களில் நடித்துள்ளார். நகைச்சுவை நடிகர் சுருளி ராஜன் தனது புகழின் உச்சியில் இருந்த போது 1980 ஆம் ஆண்டு 42 வயதில் மரணமடைந்தார்.

இப்படி, 1980 இல் அவர் தனது சினிமா வாழ்க்கையின் உச்சத்தில் இருந்தபோது அவரது அகால மரணம் தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இவரது உயிரிழப்பு காரணம் என்னவென்று அண்மையில், யூடியூப் சேனல் ஒன்றிக்கு பேட்டியளித்த நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

சினிமாவை விட்டு காணாமல் போன கௌசல்யா! காரணத்தை உடைத்த பயில்வான் ரங்கநாதன்!

இது குறித்து அவர் பேசுகையில், நடிகர் சுருளி ராஜன் நிறைய வருடங்களில் இருந்து தமிழ் சினிமாவில் பல சாதனைகளை படைக்க வேண்டியவரு, ஆனா வேகமாக வந்தாரு, வேகமாக இறந்து போயிட்டாரு. இங்க இருப்பவர்கள், அவரது கால் சீட்டு வாங்குவதற்காக வெளிநாடு மது பாட்டிகள் வாங்கி கொடுப்பார்கள்.

மதுவுக்கு அடிமையாகிய அவர் அதை கொண்டா…கொண்டா… என்று கேட்டு வாங்கி குடிப்பார். ஏற்கனவே அவருக்கு சுகர் உண்டு. இப்படி இருக்கையில், மதுவை வித்தியாசமாக அருவதற்கு அவரது நண்பர் ஒருவர் இளநீரில் ஊற்றி குடிக்க சொல்லியுள்ளார். அவர் என்றும் எனக்கு தெரியும், ஆனா அந்த பெயரை சொல்ல விரும்பவில்லை என்றும் கூறினார் பயில்வான்.

Urvashi : அந்த விஷயத்துக்கு அடிமையானார் ஊர்வசி ! பரபரப்பை கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்

இப்படி, தொடர்ந்து மதுவை இளநீரில் ஊற்றி குடித்து வந்ததால், சுகர் எகிறி படுக்கை படுக்கையாக இருந்துள்ளார். இவ்வாறு நிலைமையில் இருக்கும் பொழுது, அப்போது முதல்வராக இருந்த எம்ஜிஆர் சுருளிராஜனை காப்பாற்றுவதற்காக வெளிநாட்டுகளில் இருந்து  மருந்துகளை வரவைத்து சிகிச்சைகளை மேற்கொண்டனர். ஆனாலும் சிகிச்சை பலனளிக்காமல் சுருளிராஜன் உயிரிழந்தார்.

நல்ல திறமை இருந்தும் இளம் வயதிலயே நிறைய படங்களில் வாய்ப்பு கிடைத்தும் மது பழக்கத்தால் எல்லாவற்றையும் தனது 43 வயதிலேயே இழந்துவிட்டார் என்று அண்மைய பேட்டியில் பகிர்ந்து கொண்டார். மறைந்த பழம்பெரும் நடிகர் சுருளி ராஜன், கடைசியாக 1984 ஆம் ஆண்டு பிள்ளையார் என்ற படத்தில் நடித்திருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்