பட்டையை கிளப்பிய ‘பகாசுரன்’…முதல் நாள் வசூல் இத்தனை கோடியா..?
இயக்குனரும், நடிகருமான, செல்வராகவன், நடிகர் நட்டி குணநிதி, மன்சூர் அலிகான், தேவதர்ஷினி, ராதா ரவி, பாண்டே ரவி உள்ளிட்டோர் நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘பகாசுரன்’. இந்த படத்தை திரௌபதி, ருத்ரதாண்டவம் உள்ளிட்ட படங்களை இயக்கிய மோகன் ஜி இயக்கியுள்ளார்.
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம்.சி எஸ் இசையமைக்க படத்தை மோகன் ஜியே தயாரித்துள்ளார். வித்தியாசமான கதைக்களத்தை வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.
படத்தை பார்த்த மக்கள் தங்களுடைய பாசிட்டிவான கருத்துக்களை மட்டும் கூறி வருகிறார்கள். எனவே கண்டிப்பாக படம் விமர்சன ரீதியாக ஒரு வெற்றிப்படமாக அமையும் என தெரிகிறது. இந்த நிலையில், படம் வெளியான முதல் நாளில் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி, இந்த ‘பகாசுரன்’ திரைப்படம் வெளியான முதல் நாளில் 1.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்பதால் வரும் நாட்களில் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.