Bagheera Box office: வசூலில் மிரட்டிய “பஹிரா”…1 நாளில் எத்தனை கோடி தெரியுமா..?
பிரபுதேவா நடிப்பில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நேற்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “பஹிரா”.இந்த படத்தில் அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால், சாய் குமார், நாசர், பிரகதி. உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இந்த திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான கணேசன் எஸ் இசையமைக்க பரதன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சைக்கோ த்ரில்லர் படமான இந்த படம் அடல்ட் காட்சிகள் அதிகம் இருந்த காரணத்தால் சென்சாரில் “A” சான்றிதழை பெற்றிருந்தது.
நேற்று வெளியான இந்த திரைப்படத்தை பார்த்த பலரும் சமூக வலைத்தளங்களின் மூலமும், திரையரங்கில் சென்று பார்த்துவிட்டு செய்தியாளர்களிடமும் விமர்சனங்களை கூறி வருகிறார்கள். படத்தை பார்த்த பலரும் படம் அருமையாக இருப்பதாக கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில், “பஹிரா” திரைப்படம் வெளியான முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்பதற்கான தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, 10 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வெளியான முதல் நாளில் 1.12 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் வரும் நாட்களில் இன்னும் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.