நடிகர் வடிவேலு தான் நடிக்கும் படங்களில் தன்னுடைய யார் அதிக படங்களில் தான் சொல்வதை கேட்டுகொன்டு நடிக்கிறார்களோ அவர்களுக்கு தான் தன்னுடைய காமெடி காட்சிகளில் நடிக்க வாய்ப்பு கொடுப்பார் என்கிற பேச்சு அடிக்கடி பல பிரபலங்கள் குற்றச்சாட்டி பேசுவதை பார்த்துக்கொண்டு இருக்கிறாராம்.
குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட காமெடி நடிகை ஆர்த்தி வடிவேலு தனக்கு பிடித்தவர்களுக்கு மட்டும் தான் அவருடைய படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுப்பார் என வெளிப்படையாகவே பேசி இருந்தார். அதனை தொடர்ந்து தற்போது லொள்ளு சபாவில் நடித்ததன் மூலம் பிரபலமான பழனியப்பன் பேட்டி ஒன்றில் வடிவேலு குறித்து பேசி உள்ளார்.
இது குறித்து பேசிய லொள்ளு சபா பழனியப்பன் ” வடிவேலு சாருடன் நான் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறேன். வடிவேலு ஒரு படத்தில் ஏ.எம்.ஸ்டுடியோவில் நடிக்கிறார் என்றால் அந்த இடத்தில் யாரையும் இருக்க விடமாட்டார். படப்பிடிப்பு தளத்தில் நின்று கொண்டு யாராவது வேடிக்கை பார்த்தால் கூட அங்கு நிற்பவனை போக சொல்லு என்று கூறிவிடுவார்.
அப்படி போகவில்லை என்றால் அவனை போக சொல்லுங்க அப்போ தான் நான் நடிப்பேன். இல்லை என்றால் நான் நடிக்கமாட்டேன் என்று கூறிவிடுவார். இரண்டு மூன்று முறை என்னை வடிவேலுவிடம் அழைத்து சென்று இவன் தான் சார் புதிதாக பார்த்துள்ள பையன் என்று கூறுவார்கள். அதற்கு என்னுடைய முகம் காமெடியான முகம் இல்லை இவன் வேண்டாம் என்று வடிவேலு சார் கூறிவிடுவார். இப்படி பல படங்களில் எனக்கு வாய்ப்பு வந்தும் வடிவேலு சாரி என்னை வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார். நான் அதற்கு வருத்தமும் படவில்லை” எனவும் லொள்ளு சபா பழனியப்பன் கூறியுள்ளார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…