அவனை போக சொல்லு..’இல்லனா நடிக்க மாட்டேன்’! வடிவேலு மோசமான செயல்?

Vadivelu

நடிகர் வடிவேலு தான் நடிக்கும் படங்களில் தன்னுடைய யார் அதிக படங்களில் தான் சொல்வதை கேட்டுகொன்டு நடிக்கிறார்களோ அவர்களுக்கு தான் தன்னுடைய காமெடி காட்சிகளில் நடிக்க வாய்ப்பு கொடுப்பார் என்கிற பேச்சு அடிக்கடி பல பிரபலங்கள் குற்றச்சாட்டி பேசுவதை பார்த்துக்கொண்டு இருக்கிறாராம்.

குறிப்பாக  கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட காமெடி நடிகை ஆர்த்தி வடிவேலு தனக்கு பிடித்தவர்களுக்கு மட்டும் தான் அவருடைய படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுப்பார் என வெளிப்படையாகவே பேசி இருந்தார். அதனை தொடர்ந்து தற்போது லொள்ளு சபாவில் நடித்ததன் மூலம் பிரபலமான பழனியப்பன் பேட்டி ஒன்றில் வடிவேலு குறித்து பேசி உள்ளார்.

read more- நம்பி ஏமாந்துட்டேன்! ‘வாழ்க்கை போச்சு’… நடிகை கிரண் வேதனை!

இது குறித்து பேசிய லொள்ளு சபா பழனியப்பன் ” வடிவேலு சாருடன் நான் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறேன். வடிவேலு ஒரு படத்தில் ஏ.எம்.ஸ்டுடியோவில் நடிக்கிறார் என்றால் அந்த இடத்தில் யாரையும் இருக்க விடமாட்டார். படப்பிடிப்பு தளத்தில் நின்று கொண்டு யாராவது வேடிக்கை பார்த்தால் கூட அங்கு நிற்பவனை போக சொல்லு என்று கூறிவிடுவார்.

அப்படி போகவில்லை என்றால் அவனை போக சொல்லுங்க அப்போ தான் நான் நடிப்பேன். இல்லை என்றால் நான் நடிக்கமாட்டேன்  என்று கூறிவிடுவார். இரண்டு மூன்று முறை என்னை வடிவேலுவிடம் அழைத்து சென்று இவன் தான் சார் புதிதாக பார்த்துள்ள பையன் என்று கூறுவார்கள். அதற்கு என்னுடைய முகம் காமெடியான முகம் இல்லை இவன் வேண்டாம் என்று வடிவேலு சார் கூறிவிடுவார். இப்படி பல படங்களில் எனக்கு வாய்ப்பு வந்தும் வடிவேலு சாரி என்னை வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார். நான் அதற்கு வருத்தமும் படவில்லை” எனவும் லொள்ளு சபா பழனியப்பன் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்