பாபா திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்துடன் படத்தை பார்க்க காத்துள்ளனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரும் டிசம்பர் 12ஆம் தேதி தனது72-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். வருடம் தோறும் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்த புது படங்கள் அல்லது அவர் நடித்த பழைய படங்கள் திரையரங்குகளில் வெளியாவது வழக்கமான ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே.
அந்த வகையில், இந்த வருடம் ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான “பாபா” திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது. இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்த இந்த படத்தை ரஜினியே திரைக்கதை அமைத்து தயாரித்திருந்தார். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
இதையும் படியுங்களேன்- ஒரே படத்தில் ஓட்டம் பிடித்த அழகு தேவதைகள்…? இந்த லிஸ்டில் அவங்களும் சிக்கிட்டாங்களே…!
கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்து இந்த படத்தை மீண்டும் மெருகேற்றியுள்ளனர். இந்த படத்தில் ரஜினி 7 மந்திரங்களை பயன்படுத்துவார். அதில் இரண்டு மந்திரங்கள் சம்மந்தப்பட்ட காட்சிகள் நீக்கப்பட்டு மீண்டும் மெருகேற்றப்பட்டு தற்போது படம் ரசிகர்களுக்கு பிடித்தவாறு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
படத்திற்கான டிரைலரும் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த நிலையில், தற்போது படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த படம் வரும் டிசம்பர் 10-ஆம் தேதி ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு பரிசளிக்கும் விதமாக வெளியாகிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள்,…
ஹைதராபாத்: 'புஷ்பா 2' சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண் உயிரிழந்ததற்கு, 'போலீஸ் சொன்னதை மதிக்காமல், அல்லு அர்ஜுன்…
சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து, தூத்துக்குடி உட்பட 9 துறைமுகங்களில் நேற்று முன் தினம்…