கட்டப்பா எதற்கு துரோகி ஆனார்? விரிவான விவரத்துடன் பாகுபலி : Crown of Blood!
Baahubali : Crown of Blood : பாகுபலி: கிரவுன் ஆஃப் ப்ளட் என்ற புதிய வெப் சீரிஸ்க்கான டிரைலர் வெளியாகியுள்ளது.
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான திரைப்படம் பாகுபலி. இந்த பாகுபலி படத்தை அடிப்படையாக கொண்டு ‘பாகுபலி: கிரவுன் ஆஃப் ப்ளட்’ ( Baahubali: Crown of Blood) என்ற பெயரில் அனிமேஷன் சீரிஸ் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த தொடர் வரும் மே 17-ஆம் தேதி முதல் பிரபல ஓடிடி தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாகுபலி படத்தில் கட்டப்பா பாகுபலியை முதுகில் குத்தியதை நாம் அனைவரும் படத்திலே பார்த்து இருப்போம். இந்த ‘பாகுபலி: கிரவுன் ஆஃப் ப்ளட்’ அனிமேஷன் தொடர் அதற்கு முன்னாடி என்ன நடந்தது? கட்டப்பா ஏன் துரோகி ஆனார்? என அதற்கான நிகழ்வுகளையும் சேர்த்து எடுக்கப்பட்டுள்ளது.
மாஹிஷ்மதி சாம்ராஜ்யம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலையும் இந்த சீரிஸ் எடுத்துக்காட்டுகிறது. ரத்கதேவன் பல ராஜ்யங்களை அழித்துவிட்டு கடைசியாக மாஹிஷ்மதியை கைப்பற்ற முடிவு செய்கிறார். அவ்வாறு செய்வதில் அவர் வெற்றி பெற்றாரா? பாகுபலியும் பல்லாலதேவாவும் சேர்ந்து ரத்கதேவனிடமிருந்து தங்கள் ராஜ்ஜியத்தை எப்படிக் காப்பாற்றினார்கள் என்பதுதான் இந்தத் சீரிஸ்.
இந்த சீரிஸை ராஜமௌலி மற்றும் சரத் தேவராஜன் இணைந்து இந்த உருவாக்கி இருக்கிறார்கள். பாகுபலி இரண்டு பாகங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய அளவில் பேசப்பட்டது. குறிப்பாக பாகுபலி இரண்டாவது பாகம் ரூ. 1810 கோடிகளை வசூல் செய்து இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தது. இப்போது அது சம்பந்தமாக ஒரு வெப் சீரிஸ் எடுக்கப்பட்டுள்ள காரணத்தால் இந்த தொடர் இந்திய ஓடிடியில் புதிய சாதனைகளை படைக்குமா? என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.