பிக்பாஸில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழையும் அஸீம்க்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்.!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைய உள்ளதாக கூறும் அஸீமின் தாயாருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியானது 16 போட்டியாளர்களுடன் ஆரம்பித்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது . அதிலிருந்து முதல் வாரத்தில் ரேகா வெளியேற வைல்ட் கார்ட் என்ட்ரியாக அர்ச்சனா வீட்டிற்குள் நுழைந்தார்.அதனையடுத்து இரண்டாம் வாரத்தில் வேல் முருகன் வெளியேற சுசித்ரா செக்கன்ட் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்தார் . இதனையடுத்து சிறப்பாக விளையாடிய சுரேஷ் சக்கரவர்த்தி யாரும் எதிர்பாராத விதமாக பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் . தொடர்ந்து கடந்த வாரம் சுசித்ரா வீட்டிலிருந்து வெளியேறினார்.
சண்டை , சச்சரவுகள்,அழுகை , சந்தோசம் என அனைத்து உணர்வுகளையும் பிரிதிபலிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்த வைல்ட் கார்ட் என்ட்ரியாக சின்னத்திரை நடிகர் அஸீம் நுழைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதற்காக அவர் சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் திடீரென அஸீம் அவர்களின் தாய்க்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவும் ,இதனால் அவர் ஓட்டலில் இருந்து வெளியேறி தாயாருடன் இருந்து இரண்டு நாட்கள் பார்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது.அதனையடுத்து அவரது தாயார் குணமடைந்து வீடு திரும்ப,அஸீம் மீண்டும் ஓட்டலில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்த வாரம் அவர் பிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.இவர் ஏற்கனவே பிக்பாஸ் வீட்டினுள் உள்ள ஷிவானியுடன் இணைந்து பகல் நிலவு தொடரில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இவரது வரவு பாலாஜி மற்றும் ஷிவானி இடையே உள்ள உறவில் விரிசலை ஏற்படுத்துமா என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்