பிக்பாஸ் சீசன் 6 தமிழ் நிகழ்ச்சி கடந்த வாரம் கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டியில் மக்களின் அதிக வாக்குகளை பெற்று டைட்டிலை அசீம் தட்டி சென்றார். அவருக்கு 50 லட்சம் மதிப்பிலான காசோலை மற்றும் கார் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது.
அசீம் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது, அவர் தான் இந்த போட்டியில் வெற்றிபெற்றால் அதற்கான பரிசுத் தொகையில் கிடைக்கும் 50 லட்சத்தில், 25 லட்சத்தை கொரோனா பரவல் காலகட்டத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விக்கு தருவேன் என்று கூறியிருந்தார்.
இதையும் படியுங்களேன்- எவ்ளோ வலி..இனிமே இப்படி பண்ணாதீங்க…ரசிகருக்கு கட்டளையிட்ட ஹாரிஸ் ஜெயராஜ்.!
இதனை தொடர்ந்து தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வீடியோவில் அசீம் பேசியதாவது ” நான் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த போது வெற்றிபெற்றால் 50 லட்சத்தில், 25 லட்சத்தை கொரோனா பரவல் காலகட்டத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விக்கு கொடுத்து உதவுவேன் என்று தெரிவித்திருந்தேன்.
இப்போது வெற்றியாளராக உங்களுடைய முன்னாள் நின்று கொண்டு இருக்கிறேன். நான் உறுதியளித்த படி, அந்த 25 லட்சத்தை நான் தர தயாராக உள்ளேன். இதற்கு தகுதியானவர்கள் என்னை தொடர்பு கொள்ளுங்கள். எனக்கு வாக்களித்த என்னுடைய தமிழ் நெஞ்சங்களுக்கு ரொம்ப நன்றி” என நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…