விஷால் நடித்து வரும் அயோக்கயா படத்தின் அடுத்த அதிரடி அறிவிப்பு!!!
தமிழ் திரையுலகில் ஆறடி உயரம், மிரட்டும் தோற்றம் என அதிரடி கதாநாயகனாக இருப்பவர் நடிகர் விஷால். இவர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலும், தமிழ் சினிமா நடிகர் சங்கத்திலும் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார். இவருக்கு அண்மையில் திருமணமும் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவர் இரும்புத்திரை படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்ததாக ஓர் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு அயோக்யா எனும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை வெங்கட் மோகன் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தின் போஸ்டர்கள் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இப்படத்தின் டீசர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
DINASUVADU