சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மட்டுமின்றி, சினிமா ரசிகர்கள் அடுத்ததாக பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் என்றால் “அயலான்” திரைப்படம் என்று கூறலாம். கிட்டத்தட்ட 100 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தை இயக்குனர் ஆர்.ரவிகுமார் இயக்கியுள்ளார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்.
ஏலியன் உலகத்தில் வந்தால் எப்படி இருக்கும் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்ற ஜனவரி மாத தொடக்கத்திலேயே முடிந்துவிட்டதாக படக்குழு தரப்பில் இருந்து கூறியிருந்தார்கள்.
பிறகு இந்த திரைப்படம் டிசம்பரில் வெளியிட திட்டமிட்டு வருகின்றனர் என்றும் கூறப்பட்டது.
இதையும் படியுங்களேன்- அண்ணாச்சி என்ட்ரி செதறு செதறு.. OTT-யில் வெளியாகும் ‘தி லெஜண்ட்’.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..
இதனையடுத்து பிறகு மீண்டும் பண பிரச்சனை காரணமாக கிராஃபிக்ஸ் வேலைகள் நடக்காமல் போனதாகவும், தற்போது சிவகர்த்திகேயன் முயற்சியினால் சிக்கல்கள் தீர்க்கப்பட்டு, அதி நவீன கிராஃபிக்ஸ் வேலைகளுடன், அப்டேட் வெர்ஷனாக மீண்டும் படப்பிடிப்பை தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி, தற்போது சென்னையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் “அயலான்” படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியீட திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை முடித்த பிறகு சிவகார்த்திகேயன் மாவீரன் படப்பிடிப்பில் இணைவார். இதற்கிடையில் இன்று சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் OTT-யில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…