நாளை ஓடிடியில் வெளியாகும் ‘அயலான்’ திரைப்படம்.!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘அயலான்’ படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘அயலான்’ திரைப்படம் வரும் 9ஆம் தேதி ‘SUN NXT’இல் வெளியாகவுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கடந்த ஜனவரி 12ஆம் தேதி திரைக்கு வந்த இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ரூ.75 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. திரையரங்கில் பார்க்கத்தவர்கள் ஏலியன் அட்டகாசத்தை இனி OTT-இல் பார்க்கலாம் என்பதால், ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Thamizh suro suro vaaraaro! ????????#Ayalaan streaming worldwide from Feb 9th only on #SunNXT@Siva_Kartikeyan @rakulpreet @ravikumar_dir @arrahman #SivaKarthikeyan #ARRahman #AyalaanOnSunNXTFromFeb9 #AyalaanOnSunNXT #SunNXTExclusiveAyalaan pic.twitter.com/oYvraUvTku
— SUN NXT (@sunnxt) February 7, 2024
மேலும், இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங், இஷா கோப்பிகர், யோகி பாபு, சிவகார்த்திகேயன், கருணாகரன், பானுப்ரியா, பால சரவணன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் அயலான். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
ஸ்ருதிகாசனுடன் லோகேஷ் கனகராஜ்? குழப்பத்திற்கு கிடைத்த முற்றுப்புள்ளி!
முன்னதாக இந்த படத்தின் வெளியீட்டின் போது, அயலான் திரைப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகமும் உருவாகவுள்ளதாக சிவகார்த்திகேயன் அறிவித்திருந்தார்.