நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். இஷா கோப்பிகர், ஷரத் கேல்கர், யோகி பாபு, கருணாகரன், பானுப்ரியா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
இன்று வெளியான இந்த படத்தை பார்த்த பலரும் படம் நன்றாக இருப்பதாக கூறிவருகிறார்கள். இந்நிலையில், படம் எப்படி இருக்கிறது என்ற முழு விமர்சனத்தை பற்றி பார்க்கலாம்.
படத்தின் கதைப்படிவிண்வெளியில் இருந்து பூமியை வந்து தாக்கும் வேற்று கிரகத்தில் இருந்து வந்த ஒரு கல் கீழே விழுகிறது. கீழே விழுந்த அந்த கல் வில்லனாக நடித்திருப்பவரிடம் கிடைக்கிறது. அதனை வைத்து பண பேராசை காரணமாக அதனை வைத்து பூமிக்கு அடியில் துளையிட்டு ஸ்பார்க் என்ற கனிமத்தை எடுக்க முயற்சி செய்கிறார்.
இந்த விஷயம் ஏலியனுக்கு தெரியவர உடனடியாக “ய்டூவூய்” எனும் உலகத்திலிருந்து ஏலியன் ஒன்று பூமிக்கு வருகிறது. பிறகு தன் விண்கலத்தையும் சக்திவாய்ந்த வில்லன் குழுவிடம் ஏலியன் பறிகொடுத்துவிடுகிறது. அந்த சமயம் தான் ஏலியன் சிவகார்த்திகேயனை பார்க்கிறது.
பாலிவுட் ஹீரோவாக ஜெயித்தரா நம்ம விஜய் சேதுபதி.? மிரட்டலான மேரி கிறிஸ்துமஸ்….
நடிகர் சிவகார்த்திகேயன் தனது அம்மாவுடன் கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார். அவர் சுற்றுச்சூழல் மீதும் அதிகம் ஆர்வம் கொண்டவராக படத்தில் காட்டப்பட்டுள்ளது . அதன் பிறகு வேலையை தேடி சென்னை செல்லும் அவர் யோகி பாபு, கருணாகரன் ஆகியோருடன் பழகி அனைவரும் ஒரு குழுவாக இணைகிறார்கள். அப்போது ஒரு மிரட்டலான பயத்தை காட்டி ஏலியன் சிவகார்த்திகேயன் குழுவில் இணைகிறது.
இணைந்த பிறகு நடந்த அணைத்து விஷயங்களையும் அவரிடம் சொல்கிறது. பின் சிவகார்த்திகேயன் ஏலியனுக்கு உதவி செய்து பூமியை காப்பாறினாரா?என்பது தான் படத்தின் கதை
படத்தின் பாசிட்டிவ் என்றால் படத்தின் உடைய ஜிஜி வேலைகள் என்றே சொல்லலாம். ஏனென்றால், படத்தில் அந்த அளவிற்கு ஏலியனை படக்குழு நிஜமாக இருப்பது போலவே காட்டியுள்ளனர். மற்றோரு பாசிட்டிவ் என்றால் படத்தில் சிவகார்த்திகேயனுடன் பயணம் செய்யும் யோகி பாபு, கருணாகரன் கதாபாத்திரங்களை சொல்லலாம்.
ஏனென்றால், இவர்கள் வரும் காட்சிகளை எல்லாம் பார்க்கும்போது மக்கள் திரையரங்குகளில் அந்த அளவிற்கு மகிழ்ச்சியாக வயிறுகுலுங்க சிரித்தார்கள். அதைப்போல, படத்தின் திரைக்கதையும் காமெடி காட்சிகள் படத்தின் முதுகெலும்பு.
படத்தின் நெகட்டிவ் என்றால் வழக்கமாக படங்களில் வரும் காட்சிகளை இருப்பது போல சில காட்சிகள் இடம்பெற்று இருந்தது வேண்டும் என்றே திணித்தது போல இருந்தது. குறிப்பாக ஏலியன் சிவகார்த்திகேயனின் காதலுக்கு உதவுவது போல வைத்த காட்சிகள் எல்லாம் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்க்கவில்லை. அதைப்போல ஏலியனுக்கு குரல் கொடுத்துள்ள சித்தார்த் குரல் சரியாக செட் ஆகவில்லை எனவும் பலரும் கூறி வருகிறார்கள்.
மற்றபடி இதெயெல்லாம் தவிர்த்து பார்த்தால் பொங்கல் பண்டிகைக்கு குடும்பத்தோடு ஒரு நல்ல பொழுதுபோக்கு திரைப்படத்தை பார்க்கவேண்டும் என்றால் தாராளமாக அயலான் படத்திற்கு செல்லலலாம்.
ஆப்கானிஸ்தான் : அணியில் பந்துவீச்சில் தூண் என்றால் லெக்-ஸ்பின்னர் ரஷித் கான் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அணியின் வளர்ச்சிக்கு…
சென்னை : மும்மொழிக் கொள்கை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் "பெரியார், அண்ணா, கலைஞர்…
சென்னை : தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூரில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர் மாய்ந்த திருமலர், திருமஞ்சு, செண்பகம் ஆகியோரின்…
சென்னை : ஒவ்வொரு நடிகருக்கும் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத மிகப்பெரிய ஹிட் படங்களாக ஒரு படம் இருக்கும் என்பது…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஐரோப்பிய ஒன்றியம் (EU) அமெரிக்காவை ஏமாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது என்று குற்றம்சாட்டியுள்ளார். அதிகமாக,…
லாகூர் : நடந்து கொண்டு இருக்கும் இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து இங்கிலாந்து அணி வெளியேறியது ரசிகர்களுக்கும் அணி…