ஐயோ..ஜிபி முத்து அண்ணாச்சிக்கு என்னாச்சு..? திடீரென மருத்துவமனையில் அனுமதி.!!
நகைச்சுவை நடிகர் ஜி.பி.முத்து உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டிக் டாக் செயலி மூலம் பிரபலமான ஜி.பி.முத்து தற்போது சின்னத்திரை மட்டுமன்றி வெள்ளித்திரையிலும் கலக்கி வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது திடீரென மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் விரைவில் குணமடைய அவரது ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.
What Happened To #GPMuthu? ???? pic.twitter.com/OswGBuZe7E
— DAVID BALA (@DAVIDBALA333) April 15, 2023
மேலும், ஜி.பி.முத்து தற்போது பல பெரிய படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அதைப்போல பிரபல சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 4-வது நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.