அச்சோ..ரொம்ப அழகு…அம்சமான புகைப்படங்களை வெளியிட்ட அதிதி ஷங்கர்.!!
விருமன் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான ஷங்கரின் இளைய மகளும், நடிகையுமான அதிதி ஷங்கர் அவ்வபோது தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களுடன் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் அட்டகாசமான சில புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படங்களும் இணையத்தில் மிகவும் வைரலானது. அதனை தொடர்ந்து தற்பொழுது சிவப்பு நிற சேலையில் அட்டகாசமான சில புகைப்படங்களை இன்று வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் மிகவும் வயிறுலாகி வருகிறது. புகைப்படங்களை பார்த்து நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் “திருடிய எங்களுடைய இதயத்தை திருப்பி கொடுங்க” மேடம் என நகைச்சுவையாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் , நடிகை அதிதி ஷங்கர் விருமன் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘மாவீரன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வரும் ஜூலை 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram