தமிழகத்தில் முதல் நாளே வசூல் வேட்டையாடிய அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்!
உலகம் முழுவதும் எதிர்பார்க்கப்பட்ட அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் இன்று ரிலீஸாகியுள்ளது. இந்த படத்தின் ரிலீசுக்காக உலகம் முழுவதும் காத்திருந்த நிலையில், இந்த படம் ரிலீசாகி இருப்பது, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்று கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இப்படம் திரையிடப்பட்ட அனைத்து திரையரங்குகளும் ஹவுஸ் புல் ஆகியுள்ளது. இதனையடுத்து இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.5 கோடி வரை வசூல் செய்வதற்கான வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் ரூ.1 கோடி வரை வசூல் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.