அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தை பார்த்து அழுத ரசிகை! மருத்துவமனையில் அனுமதி!
அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இப்படத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு, மகிழ்ச்சி அளிக்கும் விதமாக இப்படம் ரிலீஸாகி பல கோடிகளை வசூல் செய்து, சாதனை படைத்து வருகிறது.
உலகெங்கும் இப்படம் ரிலீசாகி சாதனை படைத்து வருகிற நிலையில், சீனாவில் இப்படம் வெளியாகி 330 டாலர்களை வசூல் செய்துள்ளது. இந்நிலையில், அங்கு ஒரு தியேட்டரில் இப்படத்தை பார்த்துக் கொண்டிருந்த பெண் அழுது கொண்டே இத்திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தாராம்.
அப்போது அப்பெண்ணுக்கு, திடீரென சுவாச பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.