அவெஞ்சர்ஸ் நடிகர் ஜெர்மி ரென்னர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.!
அவெஞ்சர்ஸ்’ நடிகர் ரென்னர், விபத்துக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
அவெஞ்சர்ஸ் பிரபலம் ஜெர்மி ரென்னர்(ஹாக்-ஐ), அமெரிக்காவின் பனிப்புயலில், தனது வீட்டில் பனி விழும் போது விபத்தில் சிக்கி படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார், இந்த நிலையில் அவர் தற்போது சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.
சமீபத்தில் தனது ‘மேயர் ஆஃப் கிங்ஸ்டவுன்’ தொடரை ட்விட்டரில் விளம்பரப்படுத்தும் போது, தனது மூளை உறைபனியிலிருந்து, குணமடைந்து வெளியே வர தொடங்கியிருக்கிறது. மேலும் தொடரின் 201-வது எபிசோடை வீட்டில் குடும்பத்துடன் பார்க்க ஆவலுடன் இருப்பதாக அவர் கூறினார். சமீபத்தில் தனது 52ஆவது பிறந்தநாளை மருத்துவமனையில் ஜெர்மி ரென்னர் கொண்டாடினார் எனபது குறிப்பிடத்தக்கது.