விபத்தில் சிக்கிய ‘அவெஞ்சர்ஸ்’ பட நடிகர் மருத்துவமனையில் அனுமதி…!
அவெஞ்சர்ஸ் திரைப்படத்தில் ஹாவ்க்-ஐ கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அதிகம் பிரபலமான நடிகர் ஜெர்மி ரெனர் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் இன்று காலை அமெரிக்காவின் ரோஸ்-ஸ்கி தஹோ மவுண்ட் பகுதியில் புத்தாண்டு தினத்தன்று பனிப்புயல் ஒன்று தாக்கியது.
இந்த கடும் பனிப்புயலால் வாஷோ மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள 35,000 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் அங்கு இருந்த பல பகுதிகள் இருட்டில் சூழ்ந்தது. மேலும், நடிகர் ஜெர்மி ரென்னர் தனது வீட்டுப் பகுதியில் குவிந்திருந்த பனியை அகற்றும் பணியில் ஈடுபட்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக அவர் விபத்தில் சிக்கியதாக தகவல்கள் கசிந்துள்ளது.
இந்த விபத்தில் விபத்தில் சிக்கி ஜெரமி ரெனர் படுகாயமடைந்துள்ளார் .தற்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.