திரையரங்குகளில் 200 நாட்கள் ஓட்டியதற்கு பின்னரே படம் ஓடிடியில் வெளியாகும் என கூறப்படுகிறது. அதற்கான ரிலீஸ் தேதியும் இன்னும் சில மாதங்களில் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் ஜேம்ஸ் பிரான்சிஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த டிசம்பர் 16-ஆம் தேதி உலகமுழுவதும் 160 மொழிகளுக்கு மேல் திரையரங்குகளில் வெளியானது. படத்தின் VFX காட்சிகள் மிகவும் அற்புதமாக இருந்த காரணத்தால் படம் பலருக்கும் பிடித்துவிட்டது.
வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் படம் நல்ல வெற்றியை பெற்றுள்ளது. படம் 14 நாட்களை கடந்தும் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், படம் தற்போது வசூலில் இந்திய அளவில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.
அது என்னவென்றால், படம் வெளியான 14 நாட்களில் மட்டும் இந்தியா முழுவதும் 162 கோடி வசூல் செய்துள்ளது. ஹாலிவுட்டில் இருந்து வெளியன படங்களில் இந்தியாவில் அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்துள்ளது. வரும் நாட்களில் 400 கோடி வசூல் செய்து புதிய சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்களேன்- படத்தோட தோல்விக்கு அவங்க தான் காரணம்….வைகை புயல் வடிவேலு காட்டம்.!
அவதார் 2 ஓடிடி ரிலீஸ்..?
அவதார் 2 திரைப்படத்தை திரையரங்குகளில் பார்க்காத ரசிகர்களுக்கு படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என காத்துள்ளனர். அவர்களுக்காக ஒரு தகவலும் தற்போது கிடைத்துள்ளது. அது என்னவென்றால், இந்த படத்தின் ஓடிடி உரிமையை பிரபல ஓடிடி நிறுவனமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் பெரிய தொகைக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
திரையரங்குகளில் 200 நாட்கள் ஓட்டியதற்கு பின்னரே படம் ஓடிடியில் வெளியாகும் என கூறப்படுகிறது. அதற்கான ரிலீஸ் தேதியும் இன்னும் சில மாதங்களில் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…