10 நாட்களில் ரூ 300 கோடி! பிரமாண்ட வசூல் சாதனை படைத்த ‘அவதார் 2’.!

Published by
பால முருகன்

அவதார் 2 திரைப்படம் வெளியான 10 நாட்களில் இந்தியாவில் மட்டும் 300 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. 

அவதார் 2 

அவதார் படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் தொடர்ச்சியாக இயக்குனர் இயக்குனர் ஜேம்ஸ் பிரான்சிஸ் கேமரூன் பிரமாண்டமாக இயக்கியுள்ளார். இந்த இரண்டாவது பாகம் கடந்த டிசம்பர் 16-ஆம் தேதி 160-கும் மேற்பட்ட மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது.

AvatarTheWayOfWater
AvatarTheWayOfWater [Image Source: Google]

படம் 10 நாட்களை கடந்தும் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. விமர்சன ரீதியாக பார்க்கையில் படம் முதல் பாகத்தை விட கலவையான விமர்சனத்தை பெற்றே வருகிறது. படம் பார்த்த பலரும் கதையை விட சிறந்த 3D அனுபவம் கண்டிப்பாக பார்க்க வேண்டிய தியேட்டர் அனுபவம் என கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

அவதார் 2 வசூல் 

இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், படம் வெளியான 10-நாட்களில் இந்தியா முழுவதும் 300 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் 7,000 கோடிகள் வசூல் செய்துள்ளது. நேற்று கிருஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு படத்தின் வசூல் அதிகரித்துள்ளது.

Avatar The Way Of Water [Image Source: Google]

மேலும், இன்னும் இரண்டு நாட்களில் படம் 10,ஆயிரம் கோடிகள் வசூலை கடந்துவிடும் என தெரிகிறது. 3-ஆயிரம் கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 7,000 கோடிகளை வசூல் செய்து பல சாதனைகளை படைத்தது வருவதால் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.

அவதார் 2 சாதனை 

இந்திய சினிமாவில் வெளியான 10 நாட்களில் அதிகம் வசூல் செய்த 2-வது திரைப்படம் என்ற சாதனையை அவதார் 2 திரைப்படம் படைத்துள்ளது. முதலிடத்தில் இதற்கு முன்பு வெளியான ‘அவெஞ்சர்ஸ் ‘ திரைப்படம் வெளியான 10 நாட்களில் இந்தியா முழுவதும் 430 கோடி வசூல் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அவதார் 2 ஓடிடி ரிலீஸ்..?

அவதார் 2 திரைப்படத்தை திரையரங்குகளில் பார்க்காத ரசிகர்களுக்கு படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என காத்துள்ளனர். அவர்களுக்காக ஒரு தகவலும் தற்போது கிடைத்துள்ளது. அது என்னவென்றால், இந்த படத்தின்  ஓடிடி உரிமையை பிரபல ஓடிடி நிறுவனமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் பெரிய தொகைக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

AvatarTheWayOfWater [Image Source: Google]

திரையரங்குகளில்  234 நாட்கள் ஓட்டியதற்கு பின்னரே படம் ஓடிடியில் வெளியாகும் என கூறப்படுகிறது. அதற்கான ரிலீஸ் தேதியும் இன்னும் சில மாதங்களில் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

4 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

9 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

9 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

9 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

9 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

9 hours ago