10 நாட்களில் ரூ 300 கோடி! பிரமாண்ட வசூல் சாதனை படைத்த ‘அவதார் 2’.!
அவதார் 2 திரைப்படம் வெளியான 10 நாட்களில் இந்தியாவில் மட்டும் 300 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
அவதார் 2
அவதார் படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் தொடர்ச்சியாக இயக்குனர் இயக்குனர் ஜேம்ஸ் பிரான்சிஸ் கேமரூன் பிரமாண்டமாக இயக்கியுள்ளார். இந்த இரண்டாவது பாகம் கடந்த டிசம்பர் 16-ஆம் தேதி 160-கும் மேற்பட்ட மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது.
படம் 10 நாட்களை கடந்தும் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. விமர்சன ரீதியாக பார்க்கையில் படம் முதல் பாகத்தை விட கலவையான விமர்சனத்தை பெற்றே வருகிறது. படம் பார்த்த பலரும் கதையை விட சிறந்த 3D அனுபவம் கண்டிப்பாக பார்க்க வேண்டிய தியேட்டர் அனுபவம் என கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
அவதார் 2 வசூல்
இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், படம் வெளியான 10-நாட்களில் இந்தியா முழுவதும் 300 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் 7,000 கோடிகள் வசூல் செய்துள்ளது. நேற்று கிருஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு படத்தின் வசூல் அதிகரித்துள்ளது.
மேலும், இன்னும் இரண்டு நாட்களில் படம் 10,ஆயிரம் கோடிகள் வசூலை கடந்துவிடும் என தெரிகிறது. 3-ஆயிரம் கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 7,000 கோடிகளை வசூல் செய்து பல சாதனைகளை படைத்தது வருவதால் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.
அவதார் 2 சாதனை
இந்திய சினிமாவில் வெளியான 10 நாட்களில் அதிகம் வசூல் செய்த 2-வது திரைப்படம் என்ற சாதனையை அவதார் 2 திரைப்படம் படைத்துள்ளது. முதலிடத்தில் இதற்கு முன்பு வெளியான ‘அவெஞ்சர்ஸ் ‘ திரைப்படம் வெளியான 10 நாட்களில் இந்தியா முழுவதும் 430 கோடி வசூல் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அவதார் 2 ஓடிடி ரிலீஸ்..?
அவதார் 2 திரைப்படத்தை திரையரங்குகளில் பார்க்காத ரசிகர்களுக்கு படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என காத்துள்ளனர். அவர்களுக்காக ஒரு தகவலும் தற்போது கிடைத்துள்ளது. அது என்னவென்றால், இந்த படத்தின் ஓடிடி உரிமையை பிரபல ஓடிடி நிறுவனமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் பெரிய தொகைக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
திரையரங்குகளில் 234 நாட்கள் ஓட்டியதற்கு பின்னரே படம் ஓடிடியில் வெளியாகும் என கூறப்படுகிறது. அதற்கான ரிலீஸ் தேதியும் இன்னும் சில மாதங்களில் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.