இயக்குனர் ஜேம்ஸ் பிரான்சிஸ் கேமரூன் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருந்த “அவதார் 2” திரைப்படத்தை பார்க்க அணைத்து சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்திருந்த நிலையில், நேற்று படம் உலகம் முழுவதும் 160-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகியுள்ளது.
படத்தை பார்த்த பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். விமர்சன ரீதியாக பார்க்கையில் படம் முதல் பாகத்தை விட கலவையான விமர்சனத்தை பெற்றே வருகிறது. படம் பார்த்த பலரும் கதையை விட சிறந்த 3D அனுபவம் கண்டிப்பாக பார்க்க வேண்டிய தியேட்டர் அனுபவம் என கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
இதையும் படியுங்களேன் – லவ் டுடே படத்திற்காக அதிகம் சம்பளம் வாங்கிய பிரபலம் யார் தெரியுமா..?
இந்நிலையில், இந்திய மதிப்பின் படி 2,000 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் வெளியான முதல் நாளில் எத்தனை கோடிகள் வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 700 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.
இந்தியாவில் மட்டும் இந்த திரைப்படம் 40 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும், தமிழகத்தில் 5 கோடி வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. படத்திற்கு கலவையான விமர்சனத்தை பெற்று வருவதால் வரும் நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…