தேவ் படத்திற்கு தணிக்கை குழு ‘யூ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.
நடிகர் கார்த்தி நடித்த முதல் திரைப்படம் ‘ பருத்திவீரன் ‘ஆகும். இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். மேலும் சமீபத்தில் வெளிவந்த இவரின் ‘ தீரன் அதிகாரம் ஒன்று ‘ மற்றும் ‘ கடைக்குட்டி சிங்கம் ‘ ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.
மேலும் தற்போது கார்த்தி இவ்விரு வெற்றி படங்களை தொடர்ந்து ரஜத் ரவி சங்கர் இயக்கத்தில் ‘ தேவ் ‘ படத்தில் நடித்து வருகிறார்.மேலும் இந்த படத்தில் ராகுல் ப்ரீத்சிங் , ரம்யா கிருஷ்ணன் , பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டதாம். மேலும் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் வேலைகள் அனைத்தும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வெற்றி கண்டது. இந்த படம் வரும் பிப்ரவரி 14 ந் தேதி திரைக்கு வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தேவ் படத்திற்கு தணிக்கை குழு ‘யூ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.
ஹைதராபாத்: இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி தங்கம் வென்று கொடுத்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் வெங்கட தத்தா சாய்…
டெல்லி: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. கேரள ஆளுநராக இருந்த ஆரிப் முகம்மது கான், பீகாருக்கு…
கோவை : கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் பல்லடம் : தெற்கு அவினாசிபாளையம், சக்தி நகர், கொடுவாய்,…
டெல்லி : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…
சென்னை : இன்றயை காலகட்டத்தில் நாம் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக யூடியூப் உள்ளது. இதில் பொழுதுபோக்குக்காகவும், சில முக்கிய…
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டி20 மற்றும்…