மாப்ள – மச்சான் இடையிலான உறவு.. கவனம் ஈர்க்கும் ‘மெய்யழகன்’ ட்ரெய்லர்.!
ட்ரெய்லர் மாப்ள - மச்சான் கார்த்திக்கும் அரவிந்த் சாமிக்கும் இடையே மிக நெருக்கமான பிணைப்பை எடுத்துரைக்கிறது.

சென்னை : நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா நடித்துள்ள “மெய்யழகன்” படத்தை சி.பிரேம்குமார் எழுதி இயக்கியுள்ளார். வருகின்ற செப்டம்பர் 27 அன்று வெளிவரவிருக்கும் நகைச்சுவை கலந்த குடும்ப திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
ட்ரெய்லரில், மாப்ள – மச்சான் கார்த்திக்கும் அரவிந்த் சாமிக்கும் இடையே மிக நெருக்கமான பிணைப்பை டிரெய்லர் காட்டுகிறது.
இரண்டு தூரத்து உறவினர்கள் திடீரென மீட் செய்யும்பொழுது, அந்த இரண்டு பேரும் பகிர்ந்து கொள்ளும் உணர்ச்சிப்பூர்வமான பிணைப்பு இன்னும் அதிகமாக இருக்கிறதா, இல்லையா? என்பது தான் மெய்யழகனின் கதைக்கருவாக வெளிப்படுத்துகிறது. முடிவில் அரவிந்த் சுவாமி எதையோ நினைக்கும் பொழுது, அப்பொழுது சில உண்மைகளை நினைவு கூறுவது போல் தெரிகிறது.
மேலும் இந்த படத்தில், ராஜ்கிரண், சரண் சக்தி, சுவாதி கொண்டே, தேவதர்ஷினி, ஜெயபிரகாஷ், ஸ்ரீ ரஞ்சனி, இளவரசு, கருணாகரன், சரண், ரேச்சல் ரெபேக்கா, அந்தோணி, ராஜ்குமார், இந்துமதி, ராணி சம்யுக்தா, கயல் சுப்ரமணி, அசோக் பாண்டியன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
மெய்யழகன் படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோர் தங்களது 2டி என்டர்டெயின்மென்ட் பேனரின் கீழ், தயாரித்துள்ளனர். செப்டம்பர் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக தயாராகவுள்ள ‘மெய்யழகன்’ படத்துடன், நடிகர் விஜய் ஆண்டனியின் ஹிட்லர் மற்றும் பிரபுதேவாவின் பேட்ட ராப் ஆகிய படங்களும் ரிலீஸாகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025