அயோத்தியில் நான் கலந்துகொண்டது எனது வாழ்நாள் பாக்கியம் – ரஜினிகாந்த் பேட்டி!
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று ஜனவரி 22 (திங்கட்கிழமை) கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பால ராமர் சிலைக்கு பிராண பிரதிஷ்டை செய்து வைத்தார். சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், கிரிக்கெட் பிரபலங்கள் என பலரும் இந்த விழாவில் கலந்துகொண்டார்கள்.
அந்தவகையில், அயோத்தியில் நடைபெறும் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு நடிகர் ரஜினி குடும்பத்துடன் சென்றார். முக்கிய பிரமுகர்கள் அமரும் முன்வரிசையில் ஒரு சேர் ஒதுக்கப்பட்டு, ரஜினி மற்றும் அவரது குடும்பத்தினர் அழைத்துச் செல்லப்பட்டு அமர வைக்கப்பட்டார்.
வீட்ல கற்பூரம் ஏற்றவில்லை என்றால் நாம் தீவிரவாதிகள் – பா.ரஞ்சித் பரபர பேச்சு.!
இந்நிலையில், ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவை முடிந்தது வீடு திரும்புகையில், ஒவ்வொரு ஆண்டும் அயோத்தி ராமர் கோயிலுக்கு வருவேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ‘அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும். இதில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது என்னுடைய வாழ்நாள் பாக்கியமாக கருதுகிறேன்’ என்றார்