தளபதிக்கு டபுள் மாஸாக இருக்கும்! இயக்குனர் அட்லி பேட்டி!!
தளபதி விஜயை வைத்து தெறி, மெர்சல் என மெகா ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் அட்லி மீண்டும் விஜயை இயக்கவுள்ளார். சர்கார் படத்தினை தொடர்ந்து மீண்டும் அட்லியுடன் இணையவுள்ளார் விஜய்.
இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. பல நிபந்தனைகளுடன் அட்லியை இயக்குனராக கமிட் செய்துள்ளது.
இதுகுறித்து அட்லி தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் ஏற்கனவே எங்கள் கூட்டணியில் வெளியான விஜயின் மாஸை விட இதில் இன்னும் டபுள் மாஸாக இருக்கும். என குறிப்பிட்டுள்ளார்.
DINASUVADU