குருநாதரை ஓவர் ட்ராக் செய்யும் அட்லீ… அல்லு அர்ஜுனை வைத்து புது முயற்சி.!

மார்வெல் திரைப்படங்களில் பணியாற்றிய VFX நிபுணர்களை அல்லு அர்ஜுனும், அட்லீயும் சந்தித்த வீடியோவை வெளியிட்டு பிரம்மாண்ட படத்தை அறிவித்துள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

AA22xA6

சென்னை :  புஷ்பா திரைப்படம் மூலம் பான் இந்தியா அளவில் ஆக்ஷன் ஹீரோவாக தடம் பதித்த அல்லு அர்ஜூனுக்கு இன்று பிறந்த நாள். தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நட்சத்திரமாக வளர்ந்து வந்த அல்லு அர்ஜூன், வைகுண்டபுரம் திரைப்படம் மூலம் மெல்ல தமிழ் ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

இந்த நிலையில், இவரது பிறந்தநாளை முன்னிட்டு, சன் பிக்சர்ஸ் நிறுவனம், அல்லு அர்ஜுன் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அட ஆமாங்க, இயக்குநர் அட்லி தனது அடுத்த படத்தில் அல்லு அர்ஜுனுடன் கைகோர்த்துள்ளார். இப்போதைக்கு, இந்தப் படத்திற்கான தலைப்பு ‘AA22xAZ’ என வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புடன், படத்தின் முன் தயாரிப்பு வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், அல்லு அர்ஜுன், அட்லி இருவரும் வெளிநாட்டு தொழில்நுட்ப கலைஞர்களுடன் உரையாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கற்பனைக்கு எட்டாத உலகத்தை காண ஆவலாக இருப்பதாகக் குறிப்பிட்டு அந்த வீடியோவை அல்லு அர்ஜுன் சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.

மேலும் அந்த வீடியோவில், அவர் அமெரிக்கா சென்று அங்குள்ள VFX நிறுவனங்களைப் பார்வையிட்டு கலந்துரையாடினார். ஹாலிவுட் படங்களுக்கு VFX செய்யும் புகழ்பெற்ற நிறுவனங்கள் கூட, ‘AA22xA6’ ஸ்கிரிப்ட்களை ஏற்றுக்கொண்டுள்ளன. ‘புஷ்பா 2’ படத்திற்குப் பிறகு, அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் அவரது அடுத்த படம் என்னவாக இருக்கும் என்று ஆவலுடன் காத்திருந்தனர்.அதன் எதிர்பார்ப்பு ஏமாற்றமாக இல்லாமல், சன் பிக்சர்ஸ் நிறுவனம் சுமார் ரூ.600 கோடி செலவில் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது.

குருநாதரை மிஞ்சிய அட்லீ

பிரம்மாண்ட படங்களுக்கு பெயர் போன இயக்குநர் ஷங்கரின் சிசியன் தான் அட்லீ. இருந்தாலும் சும்மா சொல்ல கூடாது, குருநாதரின் சாயலில் அப்படியே வருகிறார் என்றே சொல்ல வேண்டும். தமிழில் ஓரிரு படங்களை மட்டுமே இயக்கிய அட்லீ, ஒரே அடியாக ஷாருக்கானை இயக்கி, புகலின் உச்சிக்கே சென்று விட்டார். அட்லீயின் தற்போதைய அவதாரம் ஹாலிவுட் ரேஞ்சில் இருக்கிறது. தமிழில் ரோபோ வைத்து எந்திரன் என்ற படத்தை எடுத்து ஷங்கர் மாபெரும் சாதனை படைத்தாரோ அதே போல், அட்லீயும் இப்பொது விதியசமாகவும், மிகவும் பிரம்மாண்டமாகவும் செய்ய போகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்