அஜித்துக்கு பயங்கரமான ஸ்கிரிப்ட் ரெடி…அழைப்புக்காக காத்திருக்கும் அட்லீ!
இயக்குனர் அட்லீ கடைசியாக பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. வசூல் ரீதியாக இந்த திரைப்படம் 1,100 கோடி வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது.
இந்த நிலையில், இந்த திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் அட்லீ அடுத்த யாரை வைத்து படம் இயக்கப்போகிறார் என்ற எதிர்ப்ப்பு எழுந்திருக்கும் நிலையில், அவருடைய அடுத்த படம் குறித்து ஒரு சுவாரசியமான செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அட்லீ தனது சமீபத்திய நேர்காணலில், அஜித் சார் ஒரு மாஸ் ஹீரோ. அஜித் சாருக்காக ஒரு பயங்கரமான கதை எங்கிட்டு இருக்கு. அவர் ஓகே சொன்னா அடுத்த நொடிய நான் தயார். அது நடக்கும்போது கண்டிப்பா வெடியா தான் இருக்கும்.
2000 கோடி வசூலுக்கு ஸ்கெட்ச் போட்ட அட்லீ! டாப் ஹீரோக்களை வைத்து பிரமாண்ட ஹாலிவுட் படம்
மேலும் அவர் பேசுகையில், ராஜா ராணி படப்பிடிப்பு அருகில் ‘ஆரம்பம்’ படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. அந்த சமயத்தில் நடிகை நயன்தாரா மூலம் தான் அஜித்தை சந்தித்ததாக அட்லீ கூறியுள்ளதோடு, அப்போது, தான் பள்ளி மாணவன் போல் இருப்பதால் பள்ளியை முடித்துவிட்டாயா என்று அஜித் கிண்டல் செய்ததாக கூறினார்.
இதற்கிடையில், பேட்டி ஒன்றில் இயக்குனர் அட்லீ ஷாருக்கான் மற்றும் விஜய்யை வைத்து டபுள் ஹீரோ கதையம்சம் கொண்ட கதையை நான் தயார் செய்து வருகிறேன் என்று கூறியிருந்தார்.
நடிக்க மறுத்த விஜய்! கடுப்பாகி ஆண்டவர் பக்கம் தாவிய அட்லீ?
அட்லீ கூட்டணியில் விஜய் – ஷாருக்கான்
பிரபல ஹாலிவுட் பட தயாரிப்பு நிறுவனம் ஒன்று அட்லீயிடம் ஒரு படத்தை தங்களுக்கு இயக்கி கொடுங்கள் என்று கூறியதற்கு அவரும் சம்மதம் தெரிவித்தாராம். எனவே, விஜய், ஷாருக்கான் இருவரும் இணைந்து நடிக்கும் படம் அது தான் என சினிமா வட்டாரத்தில் செய்திகள் பரவி வருகிறது. இருவரும் இணைந்து படம் நடித்தால் கண்டிப்பாக அந்த படம் 2000 கோடி வசூல் செய்யும் என்பதில் எந்த சந்தகேமும் இல்லை.