மீண்டும் அட்லீ.! தளபதி68-ஐ உறுதி செய்த ரசிகர்கள்.! விளக்கம் கொடுத்த தளபதி தரப்பு,!

அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் தனது 68வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்கிற தகவல் இணையத்தில் பரவியது. ஆனால், அது தற்போதைக்கு உண்மையில்லை என விளக்கம் கிடைத்துள்ளது.
தளபதி தற்போது அவரது 65வது திரைப்படமான பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை அடுத்து தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார் தளபதி விஜய்.
இதனை அடுத்து, அவரின் 67வது திரைப்படத்தை லோகேஷ் இயக்க உள்ளார் என்ற தகவல் ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. மாஸ்டர் பட வெற்றிக்கு பிறகு இருவரும் இணைவது உறுதி என கூறப்பட்டு வந்த நிலையில், 67வது திரைப்படமாக லோகேஷ் – தளபதி விஜய் கூட்டணி இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால் அந்த தகவலே இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில்,
நேற்று தளபதி 68வது திரைப்படத்தை அட்லீ இயக்குகிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது என இணையத்தில் செய்தி உலா வந்தது. இது குறித்து விஜய் தரப்பு கூறுகையில், தளபதி விஜய் எப்போதும் ஒரு படம் முடிந்ததும் தான் அடுத்த பட கதை கேட்பார் அப்படத்தை பற்றிய அறிவிப்பு வெளியிடபடும். இன்னும் 67வது திரைப்படத்திற்கே அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. அதற்குள் 68க்கான பேச்சுவார்த்தையா இல்லவே இல்லை என கூறிவிட்டனராம்.
தளபதி விஜய் – அட்லீ கூட்டணி இணைய அதிக வாய்ப்பிருக்கிறது. ஆனால், அது 68வது திரைப்படமாகத்தான் இருக்கும் என்பதில் உண்மையில்லை.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
நேபாளத்தில் இன்று அதிகாலையில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. பீகாரிலும் லேசான அதிர்வு.!
February 28, 2025
தமிழ்நாடு வெல்லும்: “இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா?” – முதல்வர் ஸ்டாலின் .!
February 28, 2025
சீமான் வீட்டு காவலாளிகளுக்கு மார்ச் 13ம் தேதி வரை நீதிமன்ற காவல்!
February 28, 2025
தமிழ்நாட்டின் இந்த 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் – வானிலை மையம்!
February 28, 2025