நடிக்க மறுத்த விஜய்! கடுப்பாகி ஆண்டவர் பக்கம் தாவிய அட்லீ?

இயக்குனர் அட்லீ அடுத்ததாக ஜவான் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு எந்த ஹீரோவை வைத்து படம் இயக்க போகிறார் அந்த படம் எந்த மாதிரி கதயம்சம் கொண்ட படம் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அடுத்த படம் பற்றிய கேள்விகளுக்கும் அட்லீ தெளிவான பதிலை இதுவரை கொடுக்கவில்லை எனவே, அவருடைய அடுத்த படத்தின் அப்டேட் எப்போது வெளிவரும் என பலரும் காத்திருக்கிறார்கள்.
இதற்கிடையில், பேட்டி ஒன்றில் இயக்குனர் அட்லீ ஷாருக்கான் மற்றும் விஜய்யை வைத்து டபுள் ஹீரோ கதையம்சம் கொண்ட கதையை நான் தயார் செய்து வருகிறேன் என்று கூறியிருந்தார். அதைப்போல, சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் ஷாருக்கான் கூட ஒரு ரசிகர் விஜய்யுடன் சேர்ந்து நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு கண்டிப்பாக இணைந்து நடிப்போம் என ஷாருக்கான் தெரிவித்து இருந்தார்.
விஜய் கிட்ட கதை சொல்ல போறேன்! இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் உறுதி!
பிறகு நேற்று முதல் பெரிய பேச்சாக அடிபட்டு வந்த விஷயத்தில் ஒன்று இந்த திரைப்படமும் தான். பிரபல ஹாலிவுட் பட தயாரிப்பு நிறுவனம் ஒன்று அட்லீயிடம் ஒரு படத்தை தங்களுக்கு இயக்கி கொடுங்கள் என்று கூறியதற்கு அவரும் சம்மதம் தெரிவித்தாராம். எனவே, விஜய், ஷாருக்கான் இருவரும் இணைந்து நடிக்கும் படம் அது தான் என சினிமா வட்டாரத்தில் செய்திகள் பரவியது.
ஆனால், தற்போது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால், விஜய் இந்த படத்தில் நடிக்க தனிப்பட்ட சில காரணங்களால் மறுத்துவிட்டாராம். முன்னதாகவே வெளியான தகவலை போல அவர் தளபதி 68 படத்தை முடித்த பிறகு படங்களை கமிட் செய்யும் யோசனையில் இல்லயாம். எனவே, அவருக்காக காத்திருந்தாள் வேளைக்கு ஆகாது என்று இயக்குனர் அட்லீ சற்று கடுப்பாகிவிட்டாராம்.
கமல் முத்தத்திற்கு எல்லாரும் காத்திருக்காங்க! எனக்கு கிடைச்சது..நடிகை ரேகா உற்சாகம்!
பிறகு விஜய் நடிக்கவிருந்த அந்த கதாபாத்திரத்தில் கமல்ஹாசனை நடிக்க வைத்தால் சரியாக இருக்கும் என யோசித்து அவரை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க முடிவு செய்து இருக்கிறாராம். தற்போது கமல்ஹாசன் இந்த படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை பாதி முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலை வலைப்பேச்சு தெரிவித்துள்ளார்.
ஷாருக்கான் நடிக்கும் படங்கள் எல்லாம் ஏற்கனவே, சமீபகாலமா 1000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து வருகிறது. அதைப்போல விஜய் நடிக்கும் படங்கள் 600 கோடிகளுக்கு மேல் வசூலை குவித்து வருகிறது. எனவே, இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் என்றால் அந்த படம் பெரிய அளவில் சாதனை படைக்கும் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இந்த தகவல் அவர்களுக்கு சோகத்தை கொடுத்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
RCB vs SRH: வெற்றி யாருக்கு? ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி பந்துவீச்சு.!
May 23, 2025
சோனியா – ராகுல் காந்தி சந்திப்பு..,”குடும்பத்தாருடன் இருப்பது போன்ற உணர்வு” – மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி.!
May 23, 2025