ஹிந்தியில் கேள்வி கேட்ட தொகுப்பாளரிடம், இயக்குநர் அட்லீ தமிழில் பதிலளித்த சம்பவம் சிரிப்பை வரவழைக்கிறது.
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் சிஷ்யனாக இருந்து கொண்டு, ‘ராஜா ராணி’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ, தற்போது ஷாருக்கானை இயக்கி பாலிவுட்டிலும் தனது முத்திரையை பதித்துவிட்டார்.
அவர் கடைசியாகஇயக்கிய ‘ஜவான்’ திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆனது என்றே சொல்லலாம். பாக்ஸ் ஆபிஸில் ரூ.1,100 கோடி வசூல் செய்திருந்தது. இதனையடுத்து, பிரபல ஹாலிவுட் பட தயாரிப்பு நிறுவனம் ஒன்று அட்லீயிடம் ஒரு படத்தை இயக்குகங்கள் என்று கூறியதாக தகவல் வெளியானது.
அதனை தற்பொழுது உறுதிப்படுத்தியுள்ளார். விரைவில் ஒரு ஹாலிவுட் படத்தை இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில், தனியார் செய்தி ஊடகம் நடத்திய ‘ஐடியாஸ் ஆஃப் இந்தியா’ என்ற நிகழ்ச்சியில், இயக்குனர் அட்லீ மற்றும் நடிகை கியாரா அத்வானி ஆகியோர் பங்கேற்று கொண்டு இதுவரை தங்கள் திரை வாழ்க்கையில் வெற்றியின் ரகசியங்கள் குறித்து விவர்த்தனர்.
அதாவது, இந்த நிகழ்வில் அட்லீ திரைப்பயணம் குறித்து பெண் தொகுப்பாளர் அவரிடம் கேள்விகளை கேட்டு வந்த நிலையில், அப்போது அவர் திடீரென ஹிந்தியில் கேள்விகளை முன்வைத்தார். அந்த இடத்தில் ஹிந்தி புரியாத அட்லீ, ‘நான் நல்லா இருக்கேன், நீங்க எப்படி இருக்கீங்க’ எனக் கூற, தொகுப்பாளர் உள்ளிட்ட அனைவரும் சிரித்தனர்.
தற்பொது, தொகுப்பாளினி இந்தியில் கேள்வி கேட்டதற்கு, “நான் பாலிவுட் வரை சென்றாலும் நான் எப்பொழுதும் தமிழன்டா என்று சொல்வது போல்” இயக்குனர் அட்லீ தமிழில் பதிலளித்த சம்பவம் சிரிப்பை வரவழைக்கிறது. இது தொடர்பான காணொளியும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…