சென்னை : சுதந்திர தினத்தை ஒட்டி பெண்கள் பாதுகாப்பு குறித்து இயக்குநர் அட்லீ செய்துள்ள பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நாடு முழுவதும் 78-வது சுதந்திர தின கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக கமல்ஹாசன், விஜய் என பலரும் சமூக வலைதள பக்கங்களில் சுதந்திர தின விழா பற்றி தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.
அவர்களை தொடர்ந்து இயக்குனர் அட்லீ தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் சுதந்திர தினத்தை ஒட்டி பெண்கள் பாதுகாப்பு குறித்த மகாத்மா காந்தியின் வரிகளை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் ” என்று ஒரு பெண் இரவில் சுதந்திரமாக சாலையில் நடக்க முடிகிறதோ, அன்றே இந்தியா சுதந்திரம் அடைந்தது என்று சொல்லலாம்” என ஆங்கிலத்தில் கூறியுள்ளார். அவருடைய அந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
கடந்த (ஜூலை-9) அன்று கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவனமயில் முதுகலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்த சம்பவத்தை மறைமுகமாக குறிப்பிட்டு தான் இயக்குனர் அட்லீ இன்று சுதந்திர தின விழாவை முன்னிட்டு பதிவிட்டு இருக்கிறார்.
துபாய் : நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி ரேஸிங்கில் அதீத ஆர்வம் கொண்டவர். 2000த்தின் தொடக்கத்தில் ரேஸிங்கில் கலந்து கொண்ட…
குஜராத் : நேற்று (ஜனவரி 10) குஜராத் மாநிலம் அகமதாபாத் தனியார் பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு சிசிடிவி காட்சிகள் காண்போரை…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
சென்னை : கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என…
சென்னை : சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை எந்த நிதியும் மத்திய அரசு வழங்கவில்லை என்கிற…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “நீட் தேர்வை…