பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இன்று தனது 64-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், இவர் தற்போது பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வரும் நிலையில், தமிழில் விஜய் நடித்து வரும் லியோ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இன்று சஞ்சய் தத் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அவர் நடித்து வரும் படங்களில் இருந்து படக்குழுவினர் அப்டேட்டுகளை வெளியீட்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில், தற்போது லியோ படத்தில் சஞ்சய் தத் கதாபாத்திரத்தின் பெயர் என்ன என்பதற்காக ஒரு ப்ரோமோ வீடியோவை வெளியீட்டு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர். அதன்படி, படத்தில் சஞ்சய் தத் ஆண்டனி தாஸ் எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதோ அந்த கதாபாத்திரத்திற்கான அறிமுக ப்ரோமோ..
அந்த ப்ரோமோவில் சஞ்சய் தத் வாயில் சிகரெட் ஒன்று வைத்து கொண்டு மிகவும் பயங்கரமான வில்லத்தனமான லுக்கில் நடந்து செல்கிறார்” இந்த வீடியோவை பார்த்த பலரும் லியோ படத்தில் எதோ ஒன்று இருக்கு என படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருப்பதாக கூறி வருகிறார்கள். மேலும் லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக…
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…