அதர்வாவின் பூமராங் பிப்ரவரியில் ரீலிஸ் ஆகிறது !!!
நடிகர் அதர்வ நடித்த படம் ‘ பூமராங்’.இந்த படத்தை இயக்குனர் கண்ணன் இயக்கியுள்ளார். மேலும் இந்தப்படத்தில் ஹீரோயினாக நடிகை இந்துஜாவும் நடித்துள்ளார். பூமராங் படத்தில் அதர்வா மூன்றுகதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் மேகா ஆகாஷ் என்பவரும் நடித்துள்ளார்.
மேலும் இந்த படத்தின் அறிவிப்பு தேதி அடிக்கடி சில காரணங்களால் மாற்றப்பட்டு வருகிறது. அதாவது டிசம்பர் 28ம் தேதி இந்த ரிலீஸ் ஆகும் என்று படக்குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில் சில காரணங்களால் இந்த படம் டிசம்பர் 28ம் தேதி ரிலீஸ் ஆகவில்லை. தற்போது இந்த படம் பிப்ரவரி மாதம் திரைக்கு வர உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.