13 வயதிலேயே நான் சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டும் என்று நினைத்தேன் : நடிகை தமன்னா
நடிகை தமன்னா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் கேடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சமீபத்தில் இவர் நடித்து வெளியான சைரா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின், நடிகை தமன்னா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘பெட்ரோமாக்ஸ்’ படமும் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டியில்,’இன்னும் சினிமாவில் நான் முத்தாக காட்சியில் நடித்தது கிடையாது. நான் நடிக்க வந்ததில் இருந்து அதை தொடர்கிறேன். நான் சிறு வயதிலேயே நடிக்க வந்துவிட்டேன். சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டும் என்று 13 வயதிலேயே நினைத்துவிட்டேன். அதை மாற்றிக் கொள்ளவும் மாட்டேன்.’ என கூறியுள்ளார்.