.naynthara vignesh sivan [File Image]
சென்னை: நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் பிரபல கோவில்களில் சாமி தரிசனம் செய்தார்.
நடிகை நயன்தாரா, நயன்தாரா கர்நாடகாவின் பெங்களூரில் பிறந்தவர் என்றாலும், குரியன் கொடியட்டு மற்றும் ஓமனா குரியன் ஆகியோருக்கு கேரளா மாநிலம் திருவல்லா நகரத்தை சேர்ந்த கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தார்.
டயானா மரியம் குரியன் என்ற பெயரை கொண்ட அவர் பிறப்பால் கிறிஸ்தவர். காலப்போக்கில் சினிமாவுக்கு வந்ததால் தனது பெயரை நயன்தாரா என மாற்றிக்கொண்டார். ஆனால், தமிழ், மலையாளப் படங்களில் நடிக்கத் தொடங்கியபோது கிறிஸ்தவராகவே வளர்ந்தார்.
பின்னர், 2011ஆம் ஆண்டு சென்னையில் அவர் தன்னை இந்து மதத்தில் இணைத்துக் கொண்டார். அப்போது இந்து மதத்திற்கு மாறிய நயன்தாரா, இது முற்றிலும் தனிப்பட்ட விஷயம் என்றுகூறிஉள்ளார்.
இந்நிலையில், அன்று முதல் இன்று வரை தவறாது கோயில் கோயிலாக சென்று வருகிறார். அந்த வகையில் அவ்வப்போது ஒரு நாளைக்கு ஒரு கோவில் சென்று வந்த அவர், இன்று ஒரே நாளில் பல கோயிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார்.
ஆம், அதன்படி இன்று காலை சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில், சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் தனது கணவர் விக்னேஷ் சிவன் தரிசனம் செய்த நயன்தாரா, இதையடுத்து குமாரி பகவதி அம்மன் கோவில் மற்றும் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலுக்கு என்று சிறப்பு தரிசனம் செய்தார்.
இறுதியாக, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் தரிசனம் செய்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…