தனது பேச்சால் வந்த வினை.! என்ன சொல்ல போகிறாய் ரிலீஸ்.? வருத்தத்தில் அஸ்வின்.!

என்ன சொல்ல போகிறாய் பட விழாவில் பட நாயகன் அஸ்வின் பேசிய பேச்சு சர்ச்சைக்குள்ளானதை அடுத்து படத்தின் ரிலீஸ் பிப்ரவரிக்கு தள்ளிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சி மூலமாகவும், சில ஆல்பம் பாடல்கள் மூலமும் பிரபலமானவர் அஸ்வின். இவர் முதன் முதலாக பெரிய திரையில் நடித்து வெளியாக ரெடியாகி இருந்த திரைப்படம் என்ன சொல்ல போகிறாய்.
அந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சில வாரங்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் அஸ்வின் பேசிய பேச்சுக்கள் இணையத்தில் பெரும் சர்ச்சைகளானது. அவர் அதற்கு வருத்தம் தெரிவித்து விளக்கமளித்திருந்தார்.
ஆனாலும் தற்போது வரையில் நெட்டிசன்கள் விடுவதாயில்லை. 40 கதை அஸ்வின் என வாட்டி வதைத்து வருகின்றனர். இதனை பார்த்த தயாரிப்பு நிறுவனம் பட ரிலீஸ் பிளானை மாற்றிவிட்டனராம்.
முதலில் இப்படத்தை டிசம்பர் மாத இறுதியில் வெளியிட முடிவுஎடுத்து இருந்தாராம். அதனால், தான் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினர். ஆனால், நெட்டிசன்கள் மத்தியில் அஸ்வினுக்கு எதிராக கருத்து நிலவி வருவதால், படத்தின் ரிலீஸை டிசம்பர் மாதத்தில் இருந்து பிப்ரவரிக்கு தள்ளிவைத்து விட்டனராம்.
லேட்டஸ்ட் செய்திகள்
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025
வீட்டுக்கு 200 ரூபாயில் ‘ஹை ஸ்பீடு’ இன்டர்நெட்! அமைச்சர் பி.டி.ஆர் அசத்தல் அறிவிப்பு!
April 25, 2025
“காஷ்மீர் எனக்கு 2 சகோதரர்களை கொடுத்துள்ளது” தாக்குதலில் தந்தையை இழந்த பெண் உருக்கம்.!
April 25, 2025